நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரண - கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வீதிக்கு பிரவேசிக்க முயன்றபோது டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், வேதற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி - உடுகம வீதியின் மகுழுவ சந்திக்கு அருகில், பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியிலிருந்து உடுகம நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் முன்கதவிலிருந்து பயணி ஒருவர் எதிர்பாராத விதமாக வீதியில் தவறி விழுந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் காலி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, காலி துறைமுக பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM