இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் தன வரவு என்பது ஒருநாள் அதிகமாகவும், சில நாட்கள் இயல்பாகவும்,. பல நாட்கள் குறைவாகவும் தான் கிடைத்து வருகிறது இது தொடர்பாக நாளாந்தம் மனதளவில் ஆதங்கப்படாமல் யாரும் இருப்பதில்லை. இவர்களிடத்தில் கேட்டால்... தன வரவு என்பது நாள்தோறும் சிறிதளவாவது அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். ஒரு நாளும் குறைய கூடாது. சில தினங்களில் சமநிலையில் வேண்டுமானால் செல்லலாம். ஆனால் ஒருபோதும் குறைந்திட கூடாது என்று தான் சொல்வர். ஆனால் அதற்கான சூட்சமம் தான் அவர்களுக்கு தெரிவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பிரத்யேக குறிப்பினை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி உள்ளனர்.
நீங்கள் உங்களுடைய பர்ஸ் அல்லது பண பெட்டியை உங்களுடைய வீட்டில் உள்ள சமையலறை -வரவேற்பறை- பூஜையறை அல்லது பிரத்யேக பண பெட்டிக்குரிய அறை.. ஆகியவற்றில் வைத்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் பணத்தை வைத்திருக்கும் பர்ஸ் அல்லது பணப்பெட்டியை நீங்கள் தன வரவிற்காக பாவிக்கும் அறையில் கிழக்கு திசை நோக்கி... எந்த இடத்தில் வைக்கிறீர்களோ..,! அந்த இடத்தின் அளவை துல்லியமாக கணக்கிட்டு, அதன் நடுப்பகுதியில் ( மையப் பகுதியில்) உங்களுடைய பர்ஸ் அல்லது மரத்தால் ஆன சிறிய பணப்பெட்டியை வைத்து விடுங்கள். இந்த மரத்தாலான பெட்டியில் உயர் மதிப்பு கொண்ட (11,000 ரூபாய் ) தாள்களை வைத்து விட வேண்டும்.
உடனே எம்மில் சிலர் 11,000 ரூபாய் வைத்திருந்தால்... அதை நெருக்கடி காலத்தில் செலவழித்து விடுவோம். அதன் பிறகு எப்படி தன வசியத்தை உண்டாக்குவது..? எனக் கேட்பர். இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு குறிப்பினை சுட்டிக்காட்டி உள்ளனர். குழந்தைகளின் விளையாட்டிற்காக பாவிக்கும் ரூபாய் நோட்டுகளில் உயர் மதிப்பு கொண்ட 11 ரூபாய் தாள்களை அந்த மரப்பெட்டியில் வைத்து விட வேண்டும். அதன் மீது சிறிதளவு பூவையும் வைத்து விடுங்கள். உங்களது பர்ஸை இதன் மீது வைத்து தொடர்ச்சியாக பாவிக்கும் போது.... உங்களுடைய பர்சில் பணம் இருந்து கொண்டே இருக்கும். அவை உயர்ந்து கொண்டே இருக்கும். பண தட்டுப்பாடு- பற்றாக்குறை -ஏற்படாது. இதனை பாவித்து, அனுபவித்து, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM