ஸ்பைனா பிஃபிடா எனும் முதுகு தண்டுவட குறைபாடு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

14 May, 2026 | 05:25 PM
image

சிலருக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுடைய முதுகு தண்டுவடத்தில் இடைவெளி, திசு வெளியே தெரிதல் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படலாம். இத்தகைய நிலை மருத்துவ மொழியில் ஸ்பைனா பிஃபிடா (Spina Bifida) என அழைக்கப்படுகிறது. இது முதுகு தண்டுவட வளர்ச்சியில் ஏற்படும் ஒரு பிறவிக்கால குறைபாடு ஆகும். தற்போது இதற்கான நவீன சிகிச்சை முறைகள் மூலம் பெரும்பாலான பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், சில சந்தர்ப்பங்களில் மேம்படுத்தவும் முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

கர்ப்ப காலத்தில் பொதுவாக முதல் மூன்று மாதங்கள் மற்றும் தொடர்ந்து வரும் இரண்டாம் மூன்று மாதங்களில் மகப்பேறு மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கருவின் வளர்ச்சியை நுணுக்கமாக கண்காணிக்கிறார்கள். இதன் மூலம் குழந்தையின் நரம்பு குழாய் (neural tube) வளர்ச்சி சரியாக நடைபெறுகிறதா என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

ஸ்பைனா பிஃபிடா என்பது முதுகெலும்பும் தண்டுவடமும் முழுமையாக மூடப்படாமல் வளர்ச்சி பெறும் நிலை. இது நரம்பு குழாய் குறைபாடுகளில் ஒன்றாகும். பொதுவாக கர்ப்பத்தின் ஆரம்ப 28 நாட்களுக்குள் நரம்பு குழாய் முழுமையாக மூடப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இந்த செயல்முறை முழுமையாக நடைபெறாததால், முதுகெலும்பு மற்றும் தண்டுவடத்தில் குறைபாடுகள் உருவாகின்றன.

இந்த பாதிப்பு பல வகைகளாக காணப்படுகிறது. சிலருக்கு வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு முதுகுப் பகுதியில் முடிகள் நிறைந்த திசு, சிறிய வீக்கம் அல்லது தோல் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இவற்றை மருத்துவ பரிசோதனைகள் மூலம் துல்லியமாக கண்டறிய முடியும்.

இத்தகைய நிலைகளில் இரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் தேவையானால் ஆம்னியோசென்டெசிஸ் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், குழந்தையின் நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை திட்டமிடப்படுகிறது. சில நேரங்களில் அறுவை சிகிச்சை (surgical correction) மூலம் நிலைமை கட்டுப்படுத்தப்படுகிறது.

நவீன மருத்துவ வளர்ச்சியின் மூலம் தற்போது ஸ்பைனா பிஃபிடா பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மருத்துவர் பரிந்துரைக்கும் பின்பற்ற வேண்டிய சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறைகளை சரியாக கடைபிடித்தால், பல குழந்தைகள் சாதாரண வாழ்க்கையை நோக்கி முன்னேற முடியும்.

வைத்தியர் அருண்
தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கன்ஸ்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் இதய பாதிப்பிற்கான...

2026-06-12 14:16:00
news-image

அஸ்பெர்கில்லோமா எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-06-11 17:22:11
news-image

உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினரின் எண்ணிக்கை...

2026-06-10 16:00:56
news-image

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் எனும் முழங்கை...

2026-06-09 18:18:06
news-image

இதய செயலிழப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் இம்பெல்லா...

2026-06-09 07:16:20
news-image

புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பிற்கான நவீன...

2026-06-08 17:01:59
news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15