வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் சூட்சம குறிப்பு..!?

Published By: Digital Desk 2

14 May, 2026 | 05:07 PM
image

எம்மில் பலரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சோதிடத்தையோ அல்லது  ஆன்மீகத்தையோ அதிக அளவில் நம்பிக்கை கொள்ளாதவர்களும் உள்ளனர்.

ஆனாலும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையான மாற்றங்கள் ஏற்படாதா? என ஆவலுடன் காத்திருப்பர். சிலர் தங்களது விதியை நினைத்து... இவ்வளவு தான் வாழ்க்கை என தங்களுக்கு இடையில் ஒரு எல்லையை வரையறுத்துக் கொண்டு அதற்குள் வாழ பழகிக் கொண்டிருப்பார்கள்.

இவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புகிறீர்களா? என கேட்டால்... “வேண்டும். ஆனால் அது எளிமையான வழிமுறையை கொண்டிருக்க வேண்டும்” என்றுதான் சொல்வர். இவர்களுக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வாழ்க்கையில் அதாவது நாளாந்த இயல்பான வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு சூட்சம குறிப்பினை வழங்கி உள்ளனர்.

நீங்கள் நாளாந்தம் காலையில் எழுந்து நீராடும் போது அந்த நீராடலுக்காக பயன்படுத்தும் இறுதி கோப்பை நீரை உங்கள் உடல் அல்லது தலைக்கு ஊற்றும் முன்... உங்கள் வலது கை மோதிர விரலால் “ஓம்” என்ற மந்திரத்தை அந்த கோப்பை நீரில் எழுதி... அந்த நீரினை உங்கள் உச்சந்தலையில் சிறிது சிறிதாக ஊற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் உடல் குளிர்ச்சி அடைவதை உணரலாம். இதனைத் தொடர்ந்து உங்கள் வலது கால் கட்டை விரலை தொட்டு வணங்குங்கள். அந்தத் தருணத்தில் “வாழ்க்கையில் விரும்பும் வகையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும்” என இந்த பிரபஞ்சத்திடம் ஒரு கோரிக்கையை சமர்ப்பியுங்கள். இதனை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்வதை அனுபவத்தில் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொடர் தோல்வியை மாற்றியமைப்பதற்கான எளிய வழிமுறை!

2026-06-16 17:04:51
news-image

கண் திருஷ்டியை நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2026-06-15 17:12:49
news-image

புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-12 14:13:00
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..!?

2026-06-11 17:16:42
news-image

பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும்..?

2026-06-10 16:42:14
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-06-09 18:14:07
news-image

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான பிரத்யேக...

2026-06-08 17:05:52
news-image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

2026-06-05 16:03:16
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-06-04 16:58:05
news-image

மனதின் அச்சம் நீங்குவதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-03 15:14:02
news-image

வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

2026-06-02 17:58:16
news-image

தன வரவை நாளாந்தம் அதிகரித்துக் கொள்வதற்கான...

2026-06-01 14:30:17