வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது மெட்டா

Published By: Digital Desk 2

14 May, 2026 | 12:00 PM
image

செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும் போது பயனாளர்களின் தனியுரிமையை உறுதிப்படுத்தும் வகையில், வட்ஸ்அப் மற்றும் மெட்டா செயலியில் “இன்காக்னிட்டோ சாட்” எனும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சம் வட்ஸ்அப்பின் "தனியார் செயலாக்கதொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவுடன் மேற்கொள்ளும் உரையாடல்கள் மெட்டா நிறுவனத்திற்கு கூடத் தெரிந்துக்கொள்ளமுடியாத வகையில் பயனர்களின் தனியுரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்காக்னிட்டோ சாட்  என்பது ஒரு தற்காலிக உரையாடல் இடம்பெறும் சூழலாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. உரையாடலின் போது பரிமாற்றிக்கொள்ளப்படும் தகவல்கள்  பாதுகாப்பான முறையில் செயலாக்கப்படுவதுடன், அவை சேகரித்துவைக்கப்படாது என்பதையும் உரையாடல் முடிந்ததும் செய்திகள் தானாகவே அழிந்துவிடும் என மெட்டா நிறுவனம் இது தொடர்பில் உறுதியளித்துள்ளது.

மேலும் ஏனைய நிறுவனங்களின் 'இன்காக்னிட்டோ' முறைகளைப் போலன்றி, பயனாளர்கள் கேட்கும் கேள்விகளையோ அல்லது  செயற்கை நுண்ணறிவு  வழங்கும் பதில்களையோ மெட்டா நிறுவனத்தால் பார்க்க முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆரோக்கியம் தொடர்பான சந்தேகங்கள், நிதி விவகாரங்கள் மற்றும் தொழில்முறை ஆலோசனைகள் போன்ற உணர்வுப்பூர்வமான மற்றும் தனிப்பட்ட விடயங்களை பகிர விரும்பும் பயனர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியுடன், எதிர்வரும் மாதங்களில் “சைட்-செட்”  எனும் மற்றுமொரு அம்சத்தையும் அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டுள்ளது. இது வாட்ஸ்அப்பில் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே, அந்தச் சாட்டைத் தொந்தரவு செய்யாமல் செயற்கை நுண்ணறிவின்உதவியைப் பெற பயனர்களை அனுமதிக்கும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த புதிய இன்காக்னிட்டோ செட் வசதி எதிர்வரும் மாதங்களில் படிப்படியாக அனைத்து வட்ஸ்அப் மற்றும் மெட்டா பயனர்களுக்கும் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

        

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்களின் கைகளுக்கு மெஹந்தி போடவும் இயந்திரம்...

2026-09-14 17:32:51
news-image

இந்தியாவில் கூகுளின் பிரம்மாண்ட 'அனந்தா' வளாகம்...

2026-09-12 14:40:40
news-image

iPhone 18 Pro, iPhone 18...

2026-09-10 11:16:58
news-image

ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக...

2026-09-01 15:16:48
news-image

Gemini Omni: கூகுளின் மல்டிமாடல் ஏஐ...

2026-08-29 14:07:18
news-image

ASUS இடமிருந்து AI-வலுவூட்டப்பட்ட பிரதான ExpertBook...

2026-08-13 15:49:36
news-image

கணினி, கையடக்கத் தொலைபேசிகளின் வேகத்தை அதிகரிக்கும்...

2026-08-11 11:17:38
news-image

கட்டுப்பாட்டை மீறி இணையத்தை ஊடுருவிய ஓபன்...

2026-07-29 14:59:15
news-image

சமூக வழிகாட்டுதலை மீறியதால் இலங்கையில் 4.4...

2026-07-21 11:55:51
news-image

சீனாவின் ஷென்செனில் உலகின் முதல் வர்த்தக...

2026-07-17 14:01:03
news-image

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும்...

2026-07-06 14:29:31
news-image

வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி...

2026-06-30 10:08:48