இன்றைய சூழலில் பெண்கள் உயர்கல்வி கற்று, பொருளீட்டி, சொந்தக்காலில் நிற்பதால்.. திருமணம் ஆன பிறகு கணவன்- மனைவி இடையேயான உறவில் ஆதிக்கம் ஏற்படுவதை விரும்புவதில்லை. குறிப்பாக தன் இணையின் ஆதிக்கம் இருந்தால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
அத்துடன் அதற்கு வார்த்தைகளாலும் உடல் மொழிகளாலும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக திருமணமான குறைந்த கால அவகாசத்திற்குள் இருவருக்கும் இடையே பேரன்பின் காரணமாகவோ அல்லது சிறிய வெறுப்பின் காரணமாகவோ ஒற்றுமை குறைய தொடங்குகிறது.
இரு தரப்பு பெற்றோர்கள் -நண்பர்கள்- உறவினர்கள்- சூழல் - ஆகியவை இவர்களின் விரிசலை மேலும் அதிகரித்து, பிரிவை நோக்கி பயணிக்க தூண்டுகிறார்கள். இந்நிலையில் கணவன் -மனைவி இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : சிறிதளவு இஞ்சி, விரலி மஞ்சள் -1
கணவன் -மனைவி இடையேயான ஒற்றுமை குறைந்து, உளவியல் ரீதியில் ஆன சமரசம் நிகழாத நிலையில் பெண்கள் கணவனின் தலையணைக்கு அடியில் சிறிதளவு இஞ்சியையும் பெண்கள் தங்களின் தலையணைக்கு அடியில் ஒரு விரலி மஞ்சளையும் வைத்துக்கொண்டு இருவரும் வழக்கம் போல் தனித்தனியாக உறங்கத் தொடங்கலாம். இதனை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
ஆனால் செவ்வாய்க்கிழமை தோறும் இஞ்சியையும், விரலி மஞ்சளையும் மாற்றலாம். தொடர்ந்து மூன்று வார காலகட்டத்திற்கு அல்லது ஆறு வார காலகட்டத்திற்கு இதனை மேற்கொண்டால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தொடங்கி, இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை களையப்பட்டு ஒற்றுமை அதிகரிக்கும்.
சில பெண்மணிகளுக்கு இத்தகையச்சிக்கல் மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் இதனை தொடர்ந்து பாவித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
அதே தருணத்தில் இருவரும் தங்களது சாதகங்களையும், பாதகங்களையும் சுய பரிசோதனை செய்து கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்த திட்டமிட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM