ஏறாவூர், பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலைக் கிராமத்திலுள்ள வீடொன்றின் வழிபாட்டு அறைக்குள் இருந்து  ஆணொருவரின் சடலத்தை நேற்று மாலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய மயில்வாகனம் ஸ்ரீதர்  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில்  வழிபாட்டறையைத் தாழிட்டுக் கொண்டு நெடு நேரமாக வெளியே வராமல் இருந்ததையடுத்து உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் தாழிடப்பட்டிருந்த அறையின் ஜன்னல்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மயில்வாகனம் ஸ்ரீதர் சடலமாகக் கிடந்ததாக உறவினர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.