பாகிஸ்தானை கடைசி ஆட்ட நேர பகுதியில் நிலைகுலையச் செய்தார் நஹித் ராணா; பங்களாதேஷ் 104 ஓட்டங்களால் வெற்றி

Published By: Vishnu

12 May, 2026 | 09:39 PM
image

(நெவில் அன்தனி)

மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்றைய கடைசி ஆட்ட நேர பகுதியில் பாகிஸ்தானை நஹித் ராணா நிலைகுலையச் செய்து பங்களாதேஷுக்கு 104 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இந்த வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பங்களாதேஷ் முதல் தடவையாக முழுமையான வெற்றிப் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

அத்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என பங்களாதேஷ் முன்னிலை அடைந்துள்ளது.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 268 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு போட்டியின் கடைசி நாளான இன்று செவ்வாய்க்கிழமை (12) பகல் போசன இடைவேளைக்கு பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

தேநீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் 3 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்ததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திறமையாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அப்துல்லா பஸால் தேநீர் இடைவேளைக்கு சற்று பின்னர் தஸ்கின் அஹ்மதின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்ததும் எஞ்சிய விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

பாகிஸ்தானின் கடைசி 7 விக்கெட்கள் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

அவற்றில் 4 விக்கெட்களை 22 வயதான நஹித் ராணா கைப்பற்றி, 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். பங்களாதேஷ் அணியில் மிக இள வயது வீரர் ராணா என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் அப்துல்லா பஸால் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 66 ஓட்டங்ளைப் பெற்றார். அறிமுக வீரரான பஸால் முதல் இன்னிங்ஸிலும் அரைச் சதம் குவித்திருந்தார்.

போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ், மதிய போசன இடைவேளையின் போது 9 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 413 ஓட்டங்களையும் பாகிஸ்தான் 386 ஓட்டங்களையும் பெற்றன.

அதிகூடிய வயதில் 100 விக்கெட்கள் பூர்த்தி

பங்களாதேஷின் இரண்டாவது இன்னிங்ஸில் மெஹிதி ஹசன் மிராஸின் விக்கெட்டைக் கைப்பற்றிய 39 வயதான நோமன் அலி 100ஆவது டெஸ்ட் விக்கெட்டைப் பூர்த்திசெய்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய வயதில் 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனையை நோமல் அலி நிலைநாட்டினார்.

நோமன் அலி 100ஆவது விக்கெட்டைப் பூர்த்திசெய்த போது அவரது வயது 39 வருடங்கள் 217 தினங்களாகும்.

இதன் மூலம் 130 வருடங்களாக இங்கிலாந்தின் பொபி பீலுக்கு சொந்தமாக இருந்த சாதனையை நோமன் அலி முறியடித்தார்.

பொபி பீல் 100ஆவது டெஸ்ட் விக்கெட்டைப் பூர்த்தி செய்தபோது அவரது வயது 39 வருடங்கள் 180 தினங்களாகும்.

எண்ணிக்கை சுருக்கம்

பங்களாதேஷ் 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 413 (நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 101, மொமினுள் ஹக் 91, முஷ்பிக்குர் ரஹிம் 71, லிட்டன் தாஸ் 33, உதிரிகள் 37, மொஹம்மத் அபாஸ் 92 - 5 விக்., ஷஹீன் ஷா அப்றிடி 113 - 3 விக்.)

பாகிஸ்தான் 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 386 (அறிமுக வீரர் அஸான் அவாய்ஸ் 103, மற்றொரு அறிமுக வீரர் அப்துல்லா பஸால் 60, மொஹம்மத் ரிஸ்வான் 59, சல்மான் அகா 58, இமாம் உல் ஹக் 45, மெஹிதி ஹசன் மிராஸ் 102 - 5 விக்., தய்ஜுல் இஸ்லாம் 46 - 2 விக்., தஸ்கின் அஹ்மத் 70 - 2 விக்.)

பங்களாதேஷ் 2வது இன்: வெற்றி இலக்கு 268 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 163 (அப்துல்லா பஸால் 66, சல்மான், அகா 26, நஹித் ரானா 40 - 5 விக்., தய்ஜுல் இஸ்லாம் 22 - 2 விக்., தஸ்கின் அஹ்மத் 40 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிஷார, ஷானக்க துடுப்பாட்டத்திலும் சமீர, ஹசரங்க...

2026-06-14 10:40:37
news-image

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே....

2026-06-14 10:20:21
news-image

கனடா - பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா...

2026-06-13 10:49:52
news-image

வியட்-ஹொஜ் குவித்த சதத்தின் உதவியுடன் மகளிர்...

2026-06-13 09:26:45
news-image

ஆசியா  றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப்...

2026-06-12 20:05:36
news-image

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-06-12 17:32:28
news-image

இறக்குவானையின் முன்னணி கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ள...

2026-06-12 16:55:45
news-image

பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக்...

2026-06-12 16:53:18
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2026-06-12 15:58:24
news-image

செக் குடியரசை அதிரவைத்து 2 -...

2026-06-12 14:03:31
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ரி20இல்...

2026-06-12 11:08:20
news-image

பீபா 2026 உலகக் கிண்ண ஆரம்பப்...

2026-06-12 09:40:54