போக்குவரத்து பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Published By: Vishnu

12 May, 2026 | 08:40 PM
image

போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும்  தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று செவ்வாய்கிழமை (12) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டனர். 

இதன்போது குறித்த நபரையும் நிறுத்தி போக்குவரத்து பொலிஸார் சோதனையிட்டனர். அவ்வேளை மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை காட்டியுள்ளார். 

குறித்த தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த 2024ஆம் ஆண்டு யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பொலிஸாரால் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி  (01.08.2024) தற்காலிகமாக சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றை வழங்கியதுடன் அதனை தொடர்ந்து போலியான கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி தற்காலிக போலியான சாரதி அனுமதிப் பத்திரத்தை 8 முறை நீடித்து கொடுத்துள்ளார். என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் இறப்பர் துர்திரை ஒன்றை மீட்டதுடன் போலி தற்காலிகமான சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த குறித்த நபரை கைது செய்து மட்டு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை நாளை 12ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் போலியான  ஆவணங்களை தயாரித்து வழங்கி வந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை செவ்வாய்க்கிழமை (12) பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ய அழைப்பு விடுத்த நிலையில் அங்கு சென்ற அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை புதன்கிழமை 13 ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம்...

2026-06-14 16:06:17
news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36...

2026-06-14 16:03:29
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37