எம்முடைய இல்லங்களில் இருக்கும் மாணவர்கள் அல்லது மாணவியர்கள் தங்களது பாடசாலைக்கு செல்லும் போது தங்களுடன் பிளாஸ்ரிக் போத்தல்களில் குடிநீரை எடுத்துச் செல்வது வழக்கம். ஒரு சில குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் அந்த போத்தல்களை மாற்றுவது கிடையாது. 6 மாதம் அல்லது ஒரு வருடம் கூட அதனை எடுத்துச் செல்கிறார்கள்.

ஆனால் இது போன்று தொடர்ச்சியாக பிளாஸ்ரிக் போத்தல்களை தண்ணீருக்காக பயன்படுத்தும் போது, அவற்றால் காய்ச்சல் ஏற்படுகிறது என்று தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் இவ்வகையான பிளாஸ்ரிக் போத்தல்களில் தண்ணீரை தொடர்ச்சியாக எடுத்துச் செல்லும் அதில் பாக்டீரியாக்கள் தங்கிவிடுகின்றன என்றும். இவை தான் உடலுக்கு ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அத்துடன் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு புதிய பிளாஸ்ரிக் போத்தல்களை பயன்படுத்தலாம் என்றும். தொடர்ச்சியாக 3 மாதத்திற்கு மேல் ஒரு போத்தல்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

பிளாஸ்ரிக் போத்தல்களில் குடிநீரை அருந்துவதை தவிர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்.

டொக்டர் நந்தகுமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்