எந்தவொரு அரசாங்கமும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது இறுதியாக கை வைப்பது நீதித்துறையிலாகும் - ராஜித்த சேனாரத்ன

12 May, 2026 | 05:37 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

எந்தவொரு அரசாங்கமும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது இறுதியாக கை வைப்பது நீதித்துறையிலாகும். அந்த நிலையே தற்போது இந்த அரசாங்கத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் நீதிமன்ற நடவடிக்கையில் கை வைத்தால் இந்த அரசாங்கத்துக்கு நீண்டகாலம் பயணிக்க முடியாமலபோகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி செவ்வாய்க்கிழமை (12) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாடு நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதிமன்றம் என்ற பிரதான 3தூண்களிலே அமைந்துள்ளது. இவை ஒன்றை ஒன்று கட்டுப்படுத்த முடியாது. அதனால் நிறைவேற்று அதிகாரத்தால் பாராளுமன்றத்தையோ நீதிமன்றத்தையோ கட்டுப்படுத்த முடியாது.

அதில் தலையீடு செய்யவும் முடியாது. அதனால் ஜனாதிபதி மேதின உரையில் நீதிமன்ற வழக்கு தீர்ப்பு தொடர்பில் தெரிவித்தவிடயம் நீதிமன்ற சுயாதீனத்துக்கு பாதிப்பாகும்.

அத்துடன் நாட்டு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்வதாகவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் சுங்கத்தில் இருந்து சிவப்பு ஸ்டிகர் ஒட்டிய 323 கொள்கலன்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதுதொடர்பில் எந்த வெளிப்படைத்தன்மையும் இலலை. அதேபோன்று நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலும் எந்த விசாரணையும் இல்லை.

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாேசடி தொடர்பிலும் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்பவில்லை. அதேபோன்று அதிக விலைக்கு சுப்பிரி டீசல் கொண்டுவந்தமையால் நாட்டுக்கு 11 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நட்டங்களை ஈடுசெய்வதற்கே தற்போது அரசாங்கம் மின்சார கட்டணத்தை அதிகரித்திருக்கிறது. அவ்வாறு இல்லாமல் மின்சார கட்டணம் அதிகரிப்பதற்கு வேறு எந்த தேவையும் இல்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது தெரிவித்த விடயங்களுக்கு நேர் எதிராகவே தற்போது செயற்பட்டு வருகிறது. அதனால் அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் தற்போது கைசேதப்பட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்களும் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு வருகிறார்கள். 

அதேநேரம் அரசாங்கம் சொன்னதைப்போல் செயற்படாமல் கொள்கைக்கு மாற்றமாக செயற்பட்டு வருவதால்் அரசாங்கத்துக்குள்ளும் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. எந்தவொரு அரசாங்கமும் அரசாங்கத்துக்குள் பிரச்சினை ஏற்படும்போது அதனை திசை திருப்புவதற்காக கைவைப்பது நீதிமன்றங்களிலாகும். தற்போது இந்த அரசாங்கும் அதனையே செய்துவருகிறது.

அதனால் நீதிமன்றம் மற்றும் ஊடகங்களில் கை வைத்தால் நீண்டகாலம் பயணிக்க முடியாது என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39
news-image

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித...

2026-06-08 15:54:56
news-image

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்ற...

2026-06-08 15:19:05
news-image

யாழ். சிறைச்சாலையில் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை...

2026-06-08 15:13:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும்...

2026-06-08 14:49:42
news-image

திருடிய புராதன புத்தர் சிலையை விற்க...

2026-06-08 14:45:04
news-image

அக்கரப்பத்தனையில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-06-08 14:43:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-06-08 14:39:59
news-image

அமெரிக்கா – இலங்கை ஒத்துழைப்பு :...

2026-06-08 14:20:03
news-image

சாரதி அனுமதிப்பத்திரமின்றி பயணிகளுடன் பஸ்ஸை செலுத்திய...

2026-06-08 14:39:00
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-06-08 14:34:19