மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரத்தை விதைக்கும் மக்கள் விரோத ஆட்சியே காணப்படுகின்றது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

12 May, 2026 | 05:30 PM
image

(எம்.மனோசித்ரா)

மக்களுக்கு விரோதமான, மக்களின் துன்பத்தை புரிந்து கொள்ளாத, மக்களைப் பழிவாங்கும் அரசாங்கமே இன்று நாட்டில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின்போது மின்சார கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்றும், 9,000 ரூபா கட்டணத்தை 6,000 ரூபாவாகவும், 3,000 ரூபா கட்டணத்தை 2,000 ரூபாவாகவும் குறைப்போம் என்றும் வீர வசனம் பேசிவிட்டு, தற்சமயம் பல கட்டங்களில் இந்த மின்சாரக் கட்டணங்களை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயர் மத்தியதர வர்க்கம், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் என சமூகத்தில் பல தரப்பினரும் ஆபத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மின்சாரக் கட்டண அதிகரிப்புகளால் இவர்களின் உற்பத்திச் செலவுகள் வேகமாக அதிகரித்து காணப்படுகின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதமான பங்களிப்பைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை இந்த அரசாங்கம் முற்றிலும் மறந்து புறக்கணித்துள்ளது. அதேபோன்று, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வருவதற்கு முன் இங்கு காணப்படும் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றனர். இவ்வாறு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதனால், இலங்கையை தமது முதலீட்டு தளமாக கருதி இதுவரை செயற்பட்டு வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும் மனமுடைந்து போகிறார்கள்.

முதலீட்டாளர்களைப் பாதுகாத்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்று தேர்தல் மேடைகளில் கோஷமிட்ட அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தலைமையிலான ஜேவிபி அரசாங்கம், இன்று முதலீடுகளுக்கு மூடு விழா நடத்தி வருவதுடன், தாம் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் மீறிவிட்டது. சமூக வலைதளங்கள் வழியாக பொய்களை பரப்புவதை மாத்திரமே இந்த அரசாங்கத்தால் நன்றாக செய்ய முடிகிறது. அண்மைய அரசியல் வரலாற்றில் தோன்றிய மிகவும் அதிகமான பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறிவிட்டது.

தேர்தல் மேடை தோறும் மின்சார கட்டணத்தை குறைப்போம் என்று கூறியதை நம்பியே மக்கள் பெரும் நம்பிக்கையோடு வாக்களித்தனர். அன்று உருவான அந்த மகிழ்ச்சிப் பூரிப்பு தற்போதைய அரசாங்கத்தின் அலட்சியத்தால் இறுதியில் துயரமாக மாறியுள்ளது. இன்று மக்கள் தினசரி மூன்று வேளை உணவு உண்பது, பிள்ளைகளின் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் கிட்டிய காலத்தில் நீர் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு பிரயத்தனப்பட்டு வருகின்றது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரித்ததைப் போலவே நீர்க் கட்டணத்தையும் அதிகரித்து மக்களை மேலும் அல்லல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்களின் வாழ்வை சீரழித்து, மக்களின் நம்பிக்கைகளை வீணடித்து, எதிர்பார்ப்புகளை கானல் நீராக்கி முன்னெடுக்கும் ஆட்சியே நாட்டில் தற்சமயம் காணப்படுகின்றது. எனவே, இந்த அரசாங்கத்தின் பொய் ஏமாற்றுகளை இப்போதாவது புரிந்துகொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி என்பது மக்களின் நலனுக்காக செயற்படும், மக்களை வாழவைக்கும் மனிதாபிமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரச ஆட்சியாகவே அமைந்து காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் பாடகர்...

2026-06-08 17:26:31
news-image

அரசாங்கம் கோப்புகளை மூடி மறைக்கிறது: புலனாய்வு...

2026-06-08 17:25:46
news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05
news-image

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்...

2026-06-08 16:57:39
news-image

வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட சங்கீதனை விடுதலை...

2026-06-08 16:51:53
news-image

அநுராதபுரம் சிறுமி விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி...

2026-06-08 16:46:04
news-image

சுவிஸ் தூதுவர் - ஆறு.திருமுருகன் இடையே...

2026-06-08 16:40:00
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தியதன் மூலம்...

2026-06-08 16:34:47
news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39
news-image

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித...

2026-06-08 15:54:56