(எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதியின் வழக்கு தீர்ப்பு தொடர்பான கூற்றால் 25ஆம் திகதி வழக்கு தீர்ப்புகளை அளிக்கக்கூடிய நீதிபதிகள் சங்கடமான நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனால் ஜனாதிபதியின் இந்த கூற்று தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி பிரதம நீதியரசருக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளோம் என பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் இன்று (12) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மகரகமவில் இடம்பெற்ற மேதின கூட்டத்தின்போது ஜனாதிபதி எதிர்வரும் 25ஆம் திகதி வர இருக்கும் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் தெரிவித்து, மக்களை கை தட்ட தயாராக இருக்குமாறும் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிடுவதாக அவர் அந்த தீர்ப்பை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். நீதிமன்ற வழக்கு தீர்ப்பு நீதிபதியை தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அப்படியிருக்கையில் ஜனாதிபதியின் இந்த கூற்று நீதிமன்ற சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அத்துடன் ஜனாதிபதி இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் தெரிவித்ததால், 25ஆம் திகதி வர இருக்கும் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிரல் அனைவரும் தற்போது அறிந்திருக்கின்றனர். அதனால் தீர்ப்பு வழங்கக்கூடிய நீதிபதிகளின் நிலை என்ன? இது தெளிவான அழுத்தமாகும். ஜனாதிபதியின் இந்த கூற்றால், எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றங்களில் வழக்கு தீர்ப்பு வழங்கக்கூடிய நீதிபதிகள் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். நீதிபதிகள் சரியான தீர்ப்பை வழங்கினாலும் அந்த தீர்ப்பு தொடர்பில் எதிர்த்தரப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்வது அரசியலமைப்பின் பிரகாரம் பாரிய குற்றமாகும். இதற்கான தண்டனை 1வருட சிறைத்தண்டனை முதல் 5வருட காலம் பிரஜா உரிமையை இல்லாமல் செய்ய முடியும். அதனால் ஜனாதிபதியின் நீதிமன்ற வழக்கு தீர்ப்பு தொடர்பான கூற்று தொடர்பில் பிரதம நீதியரசருக்கு மகஜர் ஒன்றை அனுப்புவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்து, கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் கைச்சாத்திட்டு பதிவுத்தபாலில் அனுப்பி இருக்கிறோம். அதேநேரம் இந்த பிரச்சினை எமது நாட்டுக்கு மாத்திரம் பாதிக்கக்கூடியது அல்ல என்பதால், இந்த மகஜரை சர்வதேச நிபுணர்கள் அமைப்புகளுக்கும் அனுப்புவதற்கும் திட்டமிட்டிருக்கிறோம்.
ஜனாதிபதியின் நீதிமன்ற வழக்கு தீர்ப்பு நீதிமன்ற சுதந்திரத்துக்கு பாதிப்பு என்பதால், சட்டத்தரணிகள் சங்கமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது என்றார்


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM