தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அதிலும் குறிப்பாக நாளாந்தம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்களது தன வரவு தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று தான் உழைப்பார்கள்.
ஆனால் அவர்களால் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வாடிக்கையாளர்களை கவர இயலாது. சேவை செய்திடவும் இயலாது. அதிலும் குறிப்பாக இன்முகத்துடனான தரமான சேவையை செய்வதில் பல்வேறு சங்கடங்கள் ஏற்படும்.
இதனால் தனவரவு ஒரு எல்லைக்கு மேல் வருவதில்லை. இந்நிலையில் இவர்கள் தங்களின் தனவரவை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றால்... அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு பிரத்யேக குறிப்பினை வழங்கி உள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள் : விரலி மஞ்சள் -சதுர வடிவிலான மஞ்சள் வண்ண துணி - அட்சதை- மஞ்சள் தூள் - பெருமாள் திரு உருவ புகைப்படம்.
வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரை தருணத்தில் ஐந்து விரலி மஞ்சளை எடுத்து அதனை சதுர வடிவிலான ஐந்து மஞ்சள் வண்ணத்துணியில் முடிச்சிட்டு, அதனை உங்களது வீட்டில் பூஜையறையில் உள்ள பெருமாள் புகைப்படத்திற்கு அருகே வைத்து விட வேண்டும்.
அதனுடன் சிறிதளவு அட்சதையும் வைத்து விட வேண்டும். இப்பொழுது நீங்கள் நாளாந்தம் தன வரவு அதிகரிக்க வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும். அத்துடன் உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு பகவானின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
அதன் பிறகு அட்சதையுடன் இருக்கும் மஞ்சள் தூளை நாளாந்தம் சிறிதளவு நீங்கள் நெற்றியில் பூசிக்கொண்டு தொழிலில் ஈடுபட வேண்டும். பிரார்த்தனை நிறைவடைந்த பிறகு அந்த ஐந்து விரலி மஞ்சளை உங்களுடைய வீட்டில் உள்ள பணப்பெட்டி அல்லது விற்பனையகத்தில் உள்ள பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும். இதனை நீங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால்.. தனவரவு அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM