அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை

Published By: Digital Desk 3

12 May, 2026 | 05:21 PM
image

அம்பலாந்தோட்டை பகுதியில் மூவரடங்கிய குழுவொன்று நபரொருவர் மீது துப்பாக்கியால் சுட்டும் கூரிய ஆயுதமொன்றால் தாக்கியும் திங்கட்கிழமை (11) கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமடல பகுதியில் நேற்று முன்தினம் (11) இரவு இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்த நபரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த மூவர் அடங்கிய குழுவொன்று, அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் கூரிய ஆயுதத்தால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். குறித்த குழுவினர் அவரின் தலையைத் துண்டித்திருந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர் ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அத்தோடு சந்தேகநபர்கள் உயிரிழந்த நபரின் தலையை எடுத்துச் சென்று மாமடல சந்தியில் உள்ள சிலையொன்றில் செருகி வைத்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மாமடல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான லக்மால் சதருவன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர், கடந்த வருடம் ஜனவரி மாதம் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர், கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி பிணையில் விடுதலையாகியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூவரின் படுகொலைக்குப் பழிவாங்கும் நோக்குடன் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அம்பாந்தோட்டை நீதிவான், சம்பவ இடத்துக்கு வருகை தந்து நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார். அத்தோடு அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47
news-image

சலே எட்டு நாட்களாக ஒரு துளி...

2026-06-14 12:48:14