(யாழ். செய்தியாளர்)
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட சுமார் 3ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பில் காணி சுவீகரிப்பு சட்டம் தொடர்பாக வெளியான வர்த்தமானியை மீள பெறுவது தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், வட மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த அமைப்பால் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட சுமார் 3,000 ஏக்கர் காணிகளை மக்கள் சட்டபூர்வமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தகமானி அறிவித்தலை மீளப்பெற அரசை வலியுறுத்துதல் குறித்துக் கோரப்பட்டது.
அத்துடன், காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை இந்து கலாசாரப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்குவது குறித்தும் பேசப்பட்டது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM