இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட மேலும் 221 வெளிநாட்டவர்கள் காலி, மிதிகமவில் கைது

Published By: Digital Desk 1

12 May, 2026 | 05:37 PM
image

(செ. சுபதர்ஷனி)

குடிவரவு - குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டினுள் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து இணையவழி மோசடிகளில் ஈடுபட்டு வந்த மேலும் 221 வெளிநாட்டவர்கள் காலி, மிதிகம உள்ளிட்ட 4 பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கைதானவர்களில் 192 பேர் இந்திய பிரஜைகளாவதுடன், 29 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் (11) முன்னெடுக்கப்பட்ட மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து இணையவழி மோசடிகளுக்காக பயன்படுத்தப்பட்டடிருகடகலாம் என சந்தேகிக்கப்படும் பெரும் எண்ணிக்கையிலான கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகல்ல மற்றும் சம்போதி சந்தி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புகளில் 23 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 19 இந்திய பிரஜைகளும் 4 நேபாள பிரஜைகளும் அடங்குவதுடன், இவர்கள் 21 முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சந்தேநபர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிங்வத்த பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 33 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 28 இந்திய பிரஜைகளும் 5 நேபாள பிரஜைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்தமை, சுற்றுலா விசாவில் வந்து தொழிலில் ஈடுபட்டமை மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு உயர் ரக சிகரெட்டுகளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொட்டந்துவ பகுதியில் அமைந்துள்ள தங்குமிடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 35 இந்திய பிரஜைகளும் 20 நேபாள பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் தங்குமிடத்தின் உரிமையாளரான 43 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 25 கணினிகள், 119 கையடக்கத் தொலைபேசிகள், 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் காலி, கல்வடுகொட மற்றும் ஸ்ரீ சுமேத மாவத்தை ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு தங்குமிடங்களில் காலி பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 110 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சுற்றுலா விசா மூலம் நாட்டிற்கு வருகை தந்து தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதான நபர்கள் 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாவர். குறித்த நபர்பகளிடமிருந்து 58 கணினிகள் மற்றும் 79 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸ் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மற்றும் மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முஸ்லிம்கள் மீது அக்கறை இருந்தால் கிழக்கு...

2026-06-12 19:43:15
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்புக்கு புதிய குழு...

2026-06-12 18:40:57
news-image

சீரற்ற காலநிலை ஓரிரு தினங்களுக்கு தொடரும்;...

2026-06-12 18:33:56
news-image

இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில்...

2026-06-12 16:55:14
news-image

ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல்...

2026-06-12 17:16:07
news-image

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல நீதிமன்றம்...

2026-06-12 16:35:22
news-image

சுகாதார, ஊடக அமைச்சின் புதிய கட்டிடத்துக்கு...

2026-06-12 16:16:25
news-image

சீன புதிய பாதுகாப்பு இணைப்புச் செயலர்...

2026-06-12 15:40:18
news-image

நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாகுவதால் ஏற்படும் சிக்கலுக்கு...

2026-06-12 16:36:29
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் ;...

2026-06-12 16:10:39
news-image

பிரபல பொலிவூட் நட்சத்திரங்களான ஷில்பா ஷெட்டி,...

2026-06-12 15:16:23
news-image

6,000 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர்...

2026-06-12 14:57:48