இலங்­கையில் டெங்கு நோயினால் இது­வ­ரையில் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­த­வர்­களில் ஆண்­களை விட பெண்­களின் எண்­ணிக்கை இரு மடங்­காகும். அதே­போன்று 15 முதல் 22 வய­திற்­குட்­பட்­ட­வர்­களே அதி­க­ளவில் இந்­நோயின் தாக்­கத்தால் இறந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

டெங்கு நோய் தொடர்பில் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வூட்டும் வாரம் இன்று முதல் எதிர்­வரும் 26 ஆம் திகதி வரையில் நடை­மு­றையில் இருக்கும் எனவும் சுகா­தார சேவை பணிப்­பாளர் நாயகம் ஜய­சுந்த பண்­டார தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் நாட­ளா­விய ரீதியில் டெங்கு நோயினால் மாத்­திரம் 1 இலட்­சத்து 51 ஆயி­ரத்தி 975 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 390 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இவ்­வாறு இது­வ­ரையில் உயி­ரி­ழந்த ஆண்­களின் எண்­ணிக்­கையை விட இரு மடங்கு பெண்கள் இறந்­துள்­ளனர்.

அதே­போன்று 15 வயது முதல் 22 வய­திற்கு இடைப்­பட்­ட­வர்கள் 65 வீதம் இறந்­துள்­ளனர். கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக 15 வய­திற்கு இடைப்­பட்ட சிறு­வர்­களின் உயி­ரி­ழப்­புக்கள் குறை­வ­டைந்­தி­ருப்­பது மகிழ்ச்சி. எனினும் இவ்­வ­ரு­டத்தில் 15 வீதத்­தினர் 15 வய­திற்­குட்­பட்ட சிறார்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். 

ஆகவே இது தொடர்பில் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வூட்ட வேண்­டிய தேவை­யி­ருக்­கின்­றது. அவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை தொடர்ந்தும் சுகா­தார அமைச்சின் ஊடாக சகல பிர­தேச செய­லா­ளர்­களின் ஊடாக நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இதன்­வி­ளை­வாக  நாட்டில் கடந்த ஜூலை மாதத்­தினை காட்­டிலும் அடுத்­த­டுத்த மாதங்­களில் டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. எனினும் தொடர்ந்தும் மழை­யு­ட­னான கால­நிலை தொடர்ந்து வரு­கின்­றது. இதன் கார­ண­மாக மேலும் டெங்கு நோய் அதி­க­ரிக்­கக்­கூ­டிய வாய்ப்­புக்கள் அதி­க­மாகும். அதனை கருத்­திற்­கொண்டு நாளை (இன்று) முதல் எதிர்­வரும் 26 ஆம் திகதி வரையில் டெங்கு விழிப்­பு­ணர்வு வாரம் அமுல்­ப­டுத்­தப்­ப­ட ­வுள்­ளது.

இவ்­வா­ரத்தில் நாட­ளா­விய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்­க­மை­வாக டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்­தி­ருப்­போ­ருக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டி க்கை எடுக்­கப்­படும். பாட­சாலை, பொது இடங்கள் ஆகி­யன தொடர்­பிலும் கவனம் செலுத்தப்படும். இந்த பணிகளுக்காக நாளொன்றுக்கு 9 ஆயிரம் பேர் வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் அவர்களில் பொலிஸார், இராணுவம் சுகா தார சேவை பணியாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை இணைத்துக்கொள்வத ற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.