(நெவில் அன்தனி)
மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் பங்களாதேஷுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளன்று இரண்டாவது ஆட்ட நேரரப் பகுதி மழையினால் முழுமையாக தடைப்பட்டதால் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தானை அதன் முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய பங்களாதேஷ், நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் அஸான் அவாய்ஸ் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் குவித்து அசத்தினார்.
மற்றொரு அறிமுக வீரர் அப்துல்லா பஸால் அரைச் சதம் குவித்தார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.
2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க 179 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலையில் இருந்தது.
போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த பங்களாதேஷ், பகல் போசன இடைவேளையின்போது 2 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அதன் பின்னர் மழை பெய்ததால் தேநீர் இடைவேளைக்கு சற்று பின்னர் வரை ஆட்டம் தொடரவில்லை.
இதன் காரணமாக பங்களாதேஷினால் பலமான நிலையை அடைய முடியாமல் போனது.
நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 58 ஓட்டங்களுடனும் முஷ்பிக்குர் ரஹிம் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.
எண்ணிக்கை சுருக்கம்
பங்களாதேஷ் 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 413 (நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 101, மொமினுள் ஹக் 91, முஷ்பிக்குர் ரஹிம் 71, லிட்டன் தாஸ் 33, உதிரிகள் 37, மொஹம்மத் அபாஸ் 92 - 5 விக்.. ஷஹீன் ஷா அப்றிடி 113 - 3 விக்.)
பாகிஸ்தான் 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 386 (அறிமுக வீரர் அஸான் அவாய்ஸ் 103, மற்றொரு அறிமுக வீரர் அப்துல்லா பஸால் 60, மொஹம்மத் ரிஸ்வான் 59, சல்மான் அகா 58, இமாம் உல் ஹக் 45, மெஹிதி ஹசன் மிராஸ் 102 - 5 விக்., தய்ஜுல் இஸ்லாம் 46 - 2 விக்., தஸ்கின் அஹ்மத் 70 - 2 விக்.)
பங்களாதேஷ் 2வது இன்: 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 152 - 3 விக். (நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 58 ஆ.இ., மொமினுள் ஹக் 56. முஷ்பிக்குர் ரஹிம் 16 ஆ.இ.)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM