வவுனியா வடக்கில் பல வீதிகளின் புனரமைப்புக்காக வீதியோரங்களில் இரு மாதங்களுக்கு முன் மதகுகள் இறக்கப்பட்ட போதும் வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட குளவிசுட்டான், பட்டிக்குடியிருப்பு, புளியங்குளம், கனகராயன்குளம் வடக்கு, கனகராயன்குளம் தெற்கு, நைனாமடு ஆகிய பகுதிகளில் உள்ள உள்ளுர் வீதிககள் சீரற்ற நிலையில் காணப்பட்டமையால் அப் பகுதி மக்கள் தொடர்ச்சியாக முன் வைத்த கோரிக்கைகு அமைவாக வட்டார உறுப்பினர்களின் வேண்டு கோளுக்கு இணங்க குறித்த வீதிகளை புனரமைப்பதற்காக பதில் தவிசாளராக செயற்பட்ட வி.சஞ்சுதன் மற்றும் பிரதேச சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் வட்டார உறுப்பினர்களுடன் இணைந்து குறித்த வீதிகளை பார்வையிட்டு அவறறை புனரமைப்பு செய்வதற்காக வீதியோரங்களில் இரு மாதங்களுக்கு முன்னர் மதகுகள் இறக்கப்பட்டன.
மதகுகள் இறங்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இது வரை வீதி புனரமைப்பு நடவடிக்கைகள எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் வட்டார உறுப்பினர்களால் சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி அவர்களின கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது பிரதேச சபை அசமந்தமாக செயற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM