(நெவில் அன்தனி)
இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூஸிலாந்து மகளிர் ஏ அணியை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எதிர்த்தாடவுள்ள இலங்கை மகளிர் ஏ அணியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி பெயரிடப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினல் நடத்தப்பட்ட திறன் தேடல் திட்டத்தின்போது சதீஸ்குமார் சஜிந்தினியின் ஆற்றல் இனங்காணப்பட்டதாக முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும் மகளிர் அணி பயிற்றுநருமான ஹேமன்த தேவப்ரிய தெரிவித்தார்.
வலதுகை வேகப்பந்துவீச்சாளரான சஜிந்தினி, சற்று வேகமாக பந்துவீசக்கூடியவர் எனவும் போட்டி அனுபவங்களின் மூலம் இன்னும் முன்னேற்றம் அடைவார் என நம்புவதாகவும் தேவப்ரிய கூறினார்.
இவர் மன்னார் புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி ஆவார். 23 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அபிவிருத்தி குழாத்திலும் சஜிந்தினி இடம்பெற்றிருந்தார்.
இதேவேளை, இலங்கை மகளிர் ஏ அணியின் தலைவியாக சத்யா சந்தீப்பனி நியிமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 2020இல் மெல்பர்னில் நடைபெற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி மூலம் சர்வதேச அறிமுகம் பெற்ற சந்தீப்பனி அதன் பின்னர் ஏ அணிகளில் விளையாடி வந்தார்.
உள்ளூர் 2023இல் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இலங்கை குழாத்தில் ஹசினி பெரேராவுக்குப் பதிலாக இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். ஆனால், இறுதி அணியில் அவர் இடம்பெறவில்லை.
ரத்கமை தேவபத்திராஜ வித்தியாலயத்தின் பழைய மாணவியும் முன்னாள் வீராங்கனையுமான சத்யா சந்தீப்பனி, உள்ளூர் கழக கிரிக்கெட் போட்டியில் FOG சீனிகம மகளிர் அணி வீராங்கனை ஆவார்.
இலங்கை மகளிர் ஏ குழாத்தில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியின் முன்னாள் தலைவி விஷ்மி குணரட்ன உட்பட இன்னும் பல இளம் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ரி20 தொடரின் போது உபாதைக்குள்ளான ஆரம்ப வீராங்கனை விஷ்மி குணரட்ன கடந்த சில மாதங்களாக இலங்கை அணியில் இடம்பெறவில்லை.
பங்களாதேஷுக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் தொடர்களிலும் இலங்கை மகளிர் அணியில் அவர் இணைக்கப்படவில்லை.
மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி அண்மித்து வருவதால் விஷ்மியின் துடுப்பாட்ட திறமையை மேம்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ஏ அணிக்கும் நியூஸிலாந்து ஏ அணிக்கும் இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரும் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
முதலாவது ஒருநாள் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து 15, 18ஆம் திகதிகளில் மற்றைய இரண்டு போட்டிகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து 3 ரி20 போட்டிகள் மே 21, 23, 25ஆம் திகதிகளில் நடைபெறும்.
இப் போட்டிகள் யாவும் உத்தியோகப்பற்ற சர்வதேச மகளிர் போட்டிகளாக கருதப்படும்.
இது இவ்வாறிருக்க இலங்கை - நியூஸிலாந்து மகளிர் ஏ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான கிண்ண அறிமுகம் இன்று மாலை இடம்பெற்றது.
இலங்கை மகளிர் ஏ அணித் தலைவி சந்தீப்பணி, நியூஸிலாந்து மகளிர் ஏ அணித் தலைவி ஜெஸ் வொட்கின் ஆகியோர் கிண்ணத்துடன் படம் எடுத்துக்கொண்டனர்.
இலங்கை மகளிர் ஏ குழாம்
சத்யா சந்தீப்பனி (தலைவி), சஞ்சனா காவிந்தி, விஷ்மி குணரட்ன, விமோக்ஷா பாலசூரிய, லிஹினி அப்சரா, லிமன்சா திலக்கரத்ன, தெவ்மி விஹங்கா, சுமுது நிசன்சலா, ரஷ்மிக்கா செவ்வந்தி, பியூமி வத்சலா, ரந்தி ப்ரேமரத்ன, சதீஸ்குமார் சஜிந்தினி, ரஷ்மி சில்வா, சமுதி ப்ரபோதா, தாருக்கா ஷெஹானி.
நியூஸிலாந்து மகளிர் ஏ குழாம்
ஜெஸ் வொட்கின் (தலைவி), கேட் அண்டர்சன், பெல்லா ஆம்ஸ்ட்ரோங், எம்மா ப்ளக், ப்ரூ கெட்டொன், மராமா டௌன்ஸ், கேட் கேஜிங், ப்ரான் ஜோனாஸ், பெல்லா ஜேம்ஸ், ஸாரா ஜெட்லி, கேய்லி நைட், டார்சி ப்ரசாத், ஹன்னா ரோவ், டாஷ் வேக்லின், பி.ஜே. வொட்கின்ஸ்,
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM