அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு : மரண தண்டனை கைதி உயிரிழப்பு

11 May, 2026 | 06:59 PM
image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கட்டடத்திலிருந்து வீழ்ந்து படுகாயமடைந்த கைதி, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் கூறுகின்றன. 

கைதி கட்டடத்திலிருந்து விழுந்ததற்கான சூழ்நிலைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

2022 மே 9ஆம் திகதி காலிமுகத் திடலில் நடைபெற்ற அமைதிப் போராட்ட காலத்தில், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்பட்ட ஜயந்த குணவர்தன ஆகிய இருவரும் நிட்டம்புவ நகரில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

அமரகீர்த்தி அத்துகோரல கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக 12 நபர்கள் கண்டறியப்பட்டதையடுத்து, அவர்களுக்கு இந்த ஆண்டு கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரே வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32
news-image

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல்,...

2026-06-08 18:16:45
news-image

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3...

2026-06-08 17:41:30
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் பாடகர்...

2026-06-08 17:26:31
news-image

அரசாங்கம் கோப்புகளை மூடி மறைக்கிறது: புலனாய்வு...

2026-06-08 17:25:46
news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05