21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலைதீவுக்குப் புறப்படுகிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

11 May, 2026 | 06:05 PM
image

(இணையத்தள செய்தி பிரிவு) 

21வது ஆசிய ஊடக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாளை  செவ்வாய்க்கிழமை (12) மாலைதீவுக்குப் புறப்படவுள்ளார். 

மாலைதீவில் உள்ள வில்லா நௌட்டிக்காவில் இன்று திங்கட்கிழமை (11) ஆரம்பமாகும் 21வது ஆசிய ஊடக மாநாட்டு 14ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ செவ்வாய்க்கிழமை (12) இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார். 

இதில் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஊடக உரிமையாளர்கள், ஊடக வல்லுநர்கள், தகவல் தொடர்பு ஆராய்ச்சியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாலைதீவு அரசாங்கப் பிரதிநிதிகள் மட்டுமின்றி, வங்கதேசத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர், பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச்செயலாளர், சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர், திமோர்-லெஸ்டேயின் சமூகத் தொடர்புக்கான அரச செயலாளர் மற்றும் ஆசியப் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பல துறைத் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டின் நான்காவது அமர்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ , ஊடகக் கொள்கை, ஊடகத் தொழில்சார் மற்றும் பொது நலனுக்கான தகவல் தொடர்புப் பொறுப்புகள் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-08 14:00:34
news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32
news-image

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல்,...

2026-06-08 18:16:45