(இராஜதுரை ஹஷான்)
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக உயிரிழந்த கபில சந்திரசேன குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அத்தகையதொரு நிலையில் அந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சாட்சியம் பெறப்படவுள்ளதாயின், அதனை முற்றாக ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகவே நாம் பார்க்கிறோம். மஹிந்தவுக்காக இன்று பலர் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்பாக காத்திருப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.பெருந்திரளான பொதுமக்களும் ஆணைக்குழுவின் முன்பாக ஒன்றுகூடுவார்கள்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குமூலமானது அச்சுறுத்தி பலவந்தமாகப் பெறப்பட்டது என கபில சந்திரசேன நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி மூலம் அறிவித்துள்ளார்.
அத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு பாரதூரமானதாக அமையும். தொடர்புடைய சம்பவம் குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சட்டவிரோத வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்படுமானால், அந்த அழைப்புக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்பதே எமது தற்போதைய முடிவாகும். ஏனெனில் அவர் ஒருபோதும் பிரச்சினைகளில் இருந்து தப்பியோடுபவர் அல்ல. இருப்பினும் நாம் பரிசீலிக்க வேண்டிய சில சட்ட ரீதியான காரணிகள் உள்ளன.
உயிரிழந்த கபில சந்திரசேன , இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக பெயரிட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அத்தகையதொரு நிலையில் அந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாட்சியம் பெறப்படவுள்ளதாயின், அதனை முற்றாக ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகவே நாம் பார்க்கிறோம். ஏனெனில், குறித்த வாக்குமூலமானது அச்சுறுத்தி, பலவந்தமாகப் பெறப்பட்ட ஒன்று என கபில சந்திரசேன ஏற்கனவே நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்பாக இன்றைய தினம் ஒன்று கூடுவார்கள். அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM