கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் கட்டடமொன்றில் தீ விபத்து

Published By: Digital Desk 3

11 May, 2026 | 05:56 PM
image

கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள கட்டடம் ஒன்றில் இன்று (11) திங்கட்கிழமை மாலை பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ விபத்து தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், கொழும்பு தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இதுவரையில் குறைந்தது 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீ விபத்தினால் இதுவரை எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், கட்டடத்திற்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை.

குறித்த கட்டடத்தில் தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை டேம் வீதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது அந்தப் பகுதியில் நிலவும் புகை மூட்டம் மற்றும் தீயணைப்புப் பணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் :...

2026-06-08 12:29:41
news-image

ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-08 14:00:34
news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32