(இராஜதுரை ஹஷான்)
கபில சந்திரசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவரின் மரணம் குறித்து எமக்கு பாரிய சந்தேகம் காணப்படுகிறது. பல விடயங்களை திரட்டியுள்ளோம். வெகுவிரைவில் உண்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவின் மரணம் குறித்து எமக்கு பாரிய சந்தேகம் காணப்படுகிறது. இந்த மரணம் தொடர்பில் பல விடயங்களை திரட்டியுள்ளோம். வெகுவிரைவில் உண்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம்.
கபில சந்திரசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவின் பெயரை குறிப்பிடுவமாறு அவருக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, நாட்டை அபிவிருத்தியடையச் செய்த மஹிந்த ராஜபக்ஷவை இவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்குவது முற்றிரும் தவறானது.
அரசாங்கத்தின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் ஆட்சியாளர்களை விமர்சித்துக் கொண்டு தமது இயலாமையை அரசாங்கம் மூடிமறைத்துக் கொள்கிறது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்விதத்திலும் தீர்வு வழங்கப்படவில்லை. தரமற்ற நிலக்கரி கொள்வனவின் சுமை 18 சதவீத மின்கட்டண அதிகரிப்பு ஊடாக மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM