தேர்தல் தோல்விக்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கியுள்ளது. இது தமிழக அரசியலிலும், அக்கட்சியிலும் பாரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கு பற்றினர்.
இந்தக் கூட்டத்தில் எடப்பாடிக்கு பழனிச்சாமியின் தவறான அரசியல் அணுகுமுறையின் காரணமாக தேர்தலில் தோல்வி ஏற்பட்டதுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது.
அத்துடன் எடப்பாடி கே பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து கட்சி தொடர்ந்து தேர்தலில் தோல்விகளை சந்தித்து வருகிறது என்றும், தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு குறித்த கட்சியின் நிலைப்பாடு குறித்தும் விரிவான ஆலோசனை நடைபெற்றது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் ஆட்சியிலும் பங்கு பற்றலாம் என்ற கருத்தினை அக்கட்சியின் மூத்த தலைவர்களான எஸ் பி வேலுமணி - சி வி சண்முகம் ஆகியோர் முன்வைத்தனர். இதற்கு கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி கே பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார்.
இதனால் விவாதம் வாக்குவாதமாக மாறியது. கட்சி நிர்வாகிகளிடத்தில் பதற்றம் உண்டானது. ஆத்திரமடைந்த சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் ஆகியோர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் 35 புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
நெருக்கடியை உணர்ந்த எடப்பாடி கே பழனிச்சாமி புதுச்சேரிக்கு சென்று, எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகத்தை சந்தித்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அனைவரும் மீண்டும் சென்னைக்கு வருகை தந்தனர்.
நேற்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மூத்த மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலரும் பங்கு பற்றினர். இந்த கூட்டத்தில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலு மணிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட செயலாளர்கள், 35க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கு பற்றவில்லை.
பிறகு ஆலோசனை நடத்திய எடப்பாடி கே .பழனிச்சாமி, மூத்த நிர்வாகிகள் குழு ஒன்றை அமைத்து எதிர் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புதல் அளித்தார். ஆனால் எதிரணியினர் எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பின் சமாதானத்தை ஏற்க மறுத்து விட்டனர்.
இதனிடையே அதிமுகவின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில் 35 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் ஆகியோருக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பதும் இது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 60% என்பதால் எடப்பாடி கே பழனிச்சாமியின் தலைமைக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணி தெரிவு செய்யப் படக்கூடும் என்றும், இந்த அணியினர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை முன்வைக்கும் பெரும்பான்மைக்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM