டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பிரத்யேக உளவியல் பாதிப்பிற்குரிய சிகிச்சை

11 May, 2026 | 04:55 PM
image

இன்றைய திகதியில் திருமணமான பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் போதிய அவகாசத்துடன் திட்டமிடுகிறார்கள். இருப்பினும் சிலருக்கு குழந்தைகள் மீது ஆசை இருந்தாலும் அன்பு செலுத்தக்கூடிய விருப்பம் இருந்தாலும் அந்த கருத்தரிக்கும் கால கட்டத்தை நினைத்து மனதளவில் மிகுந்த அச்சமடைவார்கள்.

இதனை மருத்துவ மொழியில் டோகோஃபோபியா என குறிப்பிடப்படுகிறது. இத்தகைய பெண்களுக்கு மகப்பேறு வைத்திய நிபுணர்கள் மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர்கள் போதுமான அளவில் கலந்தாலோசனை மற்றும் பிரத்யேக சிகிச்சையை அளித்து நிவாரணம் வழங்குவார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணமான பெண்களின் சிலர் கருத்தரித்தவுடன் குற்ற உணர்வுடன் இருப்பர். வெட்கப்படுவர். தனிமையை உணர்வர். கட்டுப்பாட்டை இழந்தது போன்றோ அல்லது சிக்கிக் கொண்டது போன்றோ உணர்வர். கர்ப்பமாக இருப்பதை மற்றவர்களிடம் மகிழ்ச்சியாக வெளிப்படுத்த மாட்டார்கள்.

பிரசவத்தை தவிர்ப்பதற்காக கருவை கலைப்பதற்கான முயற்சிகளிலும் அது தொடர்பான சிந்தனையிலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பர். யாரேனும் கருத்தரித்தல் பற்றி பேசினாலும் உடனடியாக அங்கிருந்து சென்று விடுவர். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பிரசவம் குறித்த உளவியல் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள் என அவதானிக்கலாம்.

பல்வேறு காரணங்களால் திருமணம் ஆகாத பெண்களுக்கும் இத்தகைய டோகோஃபோபியா எனும் உளவியல் பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு முதல் பிரசவம் மிக சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருந்தாலும் அவர்கள் மீண்டும் கருத்தரித்திருக்கும் நிலையில் இத்தகைய உளவியல் பாதிப்பிற்கு ஆளாகுவார்கள்.

இது தொடர்பாக கருத்தரித்திருக்கும் பெண்கள் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர்களிடம் விரிவாக தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவர்களில் சிலருக்கு EDMR எனும் கண் அசைவு உணர்வு நீக்க மறு செயலாக்கம் எனும் சிகிச்சை வழங்கப்படலாம்.

இதன் மூலம் நினைவுத்திறன் மேம்படுத்தப்பட்டு மிகு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பயிற்சியை பெறுவர். வேறு சிலருக்கு இது தொடர்பான கலந்தாலோசனை - கலந்துரையாடல் மற்றும் சில பிரத்யேக உளவியல் நடத்தை மேம்பாட்டு சிகிச்சை வழங்கி இதிலிருந்து நிவாரணம் தருவர்.

வைத்தியர் ஸ்ரீ தேவி 
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கன்ஸ்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் இதய பாதிப்பிற்கான...

2026-06-12 14:16:00
news-image

அஸ்பெர்கில்லோமா எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-06-11 17:22:11
news-image

உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினரின் எண்ணிக்கை...

2026-06-10 16:00:56
news-image

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் எனும் முழங்கை...

2026-06-09 18:18:06
news-image

இதய செயலிழப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் இம்பெல்லா...

2026-06-09 07:16:20
news-image

புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பிற்கான நவீன...

2026-06-08 17:01:59
news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15