மலையாள திரை உலகின் பிரபல நடிகரான சந்து சலீம் குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் :பாலன் -தி பாய் ' சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட திரைப்படம் - எதிர்வரும் ஜூன் மாதத்தில் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'மஞ்சும்மல் பொய்ஸ்' படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாலன்- தி பாய்' திரைப்படத்தில் புது முகங்கள் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இதில் மலையாள திரை உலகின் பிரபல நடிகரான சந்து சலீம் குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ஷைஜூ காலித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஸின் ஷ்யாம் இசையமைத்திருக்கிறார். பாலின அடையாளப் பின்னணியில் உணர்வு பூர்வ படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 14 ஆம் திகதியன்று இந்த திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பட மாளிகையில் வெளியாகிறது.
இதற்கான அறிவிப்பை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM