ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருப்பு ' திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, இந்தியன்ஸ் , நட்டி நட்ராஜ், சுவாசிகா , ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
பல தடைகளைக் கடந்து எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் சட்டத்தரணிகளாக ஆர் ஜே பாலாஜி - சூர்யா- திரிஷா - ஆகியோர் தோன்றுவதும் நீதியரசராக நட்டி நட்ராஜ் தோன்றுவதும் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமானதாய் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்வதாய் அமைந்துள்ளதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM