(எம்.ஆர்.எம்.வசீம்)
டீசல், னெப்கா, பேர்னல் எண்ணெய் கொள்வனவின்போது வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க அரசாங்கம் தவறி இருக்கிறது. அதுதொடர்பில் பகிரங்க விசாரணை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிலக்கரி மற்றும் எரிபொருள் கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ள இருக்கும் பகிரங்க விசாரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்ததன் காரணமாக அரசாங்கத்துக்கு 15பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அந்த பணத்தை திறைசேரியிடமிருந்து மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விநியோகிக்க இணக்கம் தெரிவித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதுதொடர்பில் அறிவித்திருக்கிறது.
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு காரணமாக குறைந்தபட்ச நட்டமே இந்த 15பில்லியன் ரூபா. அடுத்துவரும் 3மாதங்களுக்கே இந்த பணம் வழங்கப்படுகிறது. என்றாலும் தரம் குறைந்த நிலக்கரி காரணமாக சுமார் 100 பில்லியன் ரூபாவரை நட்டம் ஏற்பட்டுள்ளது. நாடு என்ற ரீதியில் இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
அத்துடன் தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் அறிந்திருந்திருந்தும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.
அதேநேரம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொழிற்சாலைகள் வியாபாரிகள் மற்றும் நடுத்தர மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளது. இவ்வாறு மின் கட்டணத்தை அதிகரித்து விடுத்துள்ள அறிக்கையில் மிகமுக்கியமான விடயம் ஒன்றையும் குறிப்பிட்டிருக்கிறது. மின்சார உற்பத்திக்காக எரிபொருள் கொள்வனவு செய்யும் செயற்பாடு தொடர்பில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் 18ஆவது உறுப்புரைக்கமைய பகிரங்க விசாரணை ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறது.இது சத்தியக் கூற்றின் பிரகாம் சாட்சி பெற்றுக்கொண்டு வழக்கு விசாரணை போன்று இடம்பெறும்.
இதன் மூலம் டீசல், னெப்கா, பேர்னல் எண்ணெய் கொள்வனவு செயற்பாடு தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறது. கடந்த காலத்தில் மத்திய கிழக்கு யுத்தத்தை காரணம் காட்டி, உலகிலேயே அதிக விலைக்கு உலக சந்தையில் நாங்கள் எரிபொருள் கொள்வனவு செய்தோம். அவ்வாறு அதிக விலைகொடுத்து எரிபொருள் வாங்குவதற்கு எங்களுக்கு தேவைப்பாடு இருக்கவில்லை. அதேநேரம் இந்த எரிபொருட்கள் கொள்வனவின்போது எந்த வகையிலும் வெளிப்படடைத்தன்மையும் இருக்கவில்லை.
அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது தெரிவித்த விடயம்தான் வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதாகவும் மோசடிக்கு இருக்கும் இடங்களை நீக்குவதாகவும் எரிபொருள் காரணமாக மின்சார கட்டணம் மீது ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை நீக்குவதற்காக மாற்று வழிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தது.
என்றாலும் டீசல், னெப்கா, பேர்னல் எண்ணெய் கொள்வனவின்போது வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க அரசாங்கம் தவறி இருக்கிறது அதனாலே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதுதொடர்பில் பகிரங்க விசாரணை மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பில் எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். நிலக்கரி கொள்வனவு மாத்திரமல்ல எரிபொருள் கொள்வனவின்போதும் பாரிய மோசடி ஏற்பட்டிருக்கிறது. அது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குவின் பகிரங்க விசாரணையின்போது, நாங்களும் தகவல் தெரிவிக்க எதிர்பார்க்கிறோம் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM