இலங்கையில் டிஜிட்டல் முறைமையை நோக்கிய மாற்றத்திற்கான பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை மைற்கல்லாக அமையும் வகையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைப் பொருளாதாரத்தை நோக்கிய நாட்டின் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்குடன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பொது விரைவுக் குறியீட்டுக் கொடுப்பனவு நிகழ்ச்சித்திட்டம் காணப்படுகின்றது.
QR அடிப்படையிலான டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பரவலான பயன்பாட்டை ஊக்குவித்து, காகித நோட்டுக்களின் பாவனையில் தங்கியிருப்பதைக் குறைப்பதே இம்முயற்சியின் நோக்கம். அந்த வகையில், மொபைல் சாதனங்கள் மூலமாக, பரிவர்த்தனைகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும், மற்றும் சௌகரியமாகவும் மேற்கொள்வதற்கு தனிநபர்களுக்கும் மற்றும் வணிகங்களுக்கும் இடமளிக்கின்றது.
டிஜிட்டல் வங்கிச்சேவையில் முன்னோடி என்ற ரீதியில், டிஜிட்டல்ரீதியாக வலுவூட்டப்பட்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியவாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தேசிய முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கு மக்கள் வங்கி பெருமையுடன் முன்வந்துள்ளது.
QR அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மற்றும் பல்வகைப்பட்ட அன்றாட நிதிச் சேவைகளுக்கான தங்குதடையற்ற தளத்தை வழங்குகின்ற “People’s Pay” என்ற தனது பிரதான டிஜிட்டல் பணப்பையினூடாக இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு வங்கி தனது ஆதரவை வழங்குகின்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கங்களுக்கு அமைவாக, எவ்விதமான மேலதிக கட்டணங்களுமின்றி QR பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியும். அத்துடன், வணிகர்களும் ரூபா 5,000 வரையான பரிவர்த்தனைகளை எவ்விதமான கட்டணங்களுமின்றி முன்னெடுக்க முடியும்.
இதனை உள்வாங்கிக் கொள்வதை மேலும் ஊக்குவிக்கும் முகமாக, நாடெங்கிலும் டிஜிட்டல் கொடுப்பனவுப் பயன்பாட்டின் ஈடுபாட்டை மேம்படுத்தி, ஊக்குவிப்பதற்காக People’s Pay பயனர்கள் மத்தியிலிருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, மதிப்புமிக்க பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
மக்கள் வங்கியின் பங்கேற்பானது பாரம்பரியமான இணைய வங்கிச்சேவைக்கு அப்பால், ஒருங்கிணைந்த, வாழ்வியலை மையப்படுத்திய நிதிச் சூழலை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கொண்ட அதன் தற்போதைய டிஜிட்டல் மாற்றத்திற்கான உத்தியைப் பிரதிபலிக்கின்றது. பாதுகாப்பான, வினைதிறன்மிக்க, மற்றும் இலகுவான பயன்பாடு கொண்ட டிஜிட்டல் தளங்களை வழங்கி, இத்தொழிற்துறையின் தரஒப்பீட்டு நியமங்களை இவ்வங்கி தொடர்ந்தும் நிலைநாட்டி வருவதுடன், வாடிக்கையாளர்கள் எங்கேயும், எப்போதும் தங்குதடையற்ற வங்கிச்சேவைகளுக்கான அணுகலைக் கொண்டிருப்பதை உறுதி செய்கின்றது.
இம்முயற்சியின் மையமாகக் காணப்படுகின்ற People’s Pay ஆனது, அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளை சீரமைத்து, தற்காலத்து நுகர்வோர் மத்தியில் மாற்றங்கண்டு வருகின்ற தேவைகளை நிறைவேற்று வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன டிஜிட்டல் பணப்பையாகும். இச்செயலியானது தங்குதடையற்ற, சுயமாக பதிவை மேற்கொள்ள நடைமுறை கொண்ட, விரிவான மும்மொழி உதவிச்சேவையுடன் கொடுப்பனவு விபரங்களை பாதுகாக்க சேமிக்க உதவுவதால் பயனர்கள் மத்தியில் சௌகரியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் உறுதி செய்கின்றது.
மேற்குறிப்பிட்ட சிறப்பம்சங்களுக்குப் புறம்பாக, மிகவும் இலாவகமாகவும், திறன்மிக்க வழியிலும் QR அடிப்டையிலான People’s Pay பரிவர்த்தனைகளையும், பயன்பாட்டுக் கட்டணங்களுக்கான கொடுப்பனவுகளை நிகழ்நேரத்தில் மேற்கொள்ளவும் செயலி வாடிக்கையாளர்களுக்கு இடமளிக்கின்றது.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை இதனுடன் ஒன்றிணைத்துக் கொள்ளும் வசதியானது நெகிழ்தன்மை மற்றும் சௌகரியத்தை மேலும் மேம்படுத்தும் அதேசமயம், பரிவர்த்தனைத் தொகையின் உச்ச வரம்பினை நிர்ணயித்துக் கொள்ளும் வசதி பயனர்களுக்கு மகத்தான அளவில் நிதிக் கட்டுப்பாடு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பினை வழங்குகின்றது.
தேசிய பொது விரைவுக் குறியீட்டை கைக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் ஒரு மூலோபாய உத்தியாக,Peer-to-Peer (P2P) QR பரிவர்த்தனைகளுக்கும் People’s Pay செயலி தற்போது இடமளிக்கின்றது. நிலையான மற்றும் மாறுகின்ற ஞசு குறியீடுகளைத் தோற்றுவிப்பதற்கு இத்தொழிற்பாடு பயனர்களுக்கு இடமளிப்பதுடன், அந்தரங்கமான கணக்கு விபரங்களை வெளிப்படுத்த வேண்டிய தேவையின்றி திறன்மிக்க வழியில் பரிவர்த்தனைகளுக்கு இடமளிக்கின்றது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM