தமிழ் சினிமாவில் தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரரான நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கான் சிட்டி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நான் தான் கிங்கு' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி , வி டி வி கணேஷ் ,தீபா ராமானுஜம், ராதா ரவி, அருள்தாஸ், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிஷ் துரைராஜ் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற கொரியன் ஃபேமிலி எனும் முதல் பாடல் வெளியாகி நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற 'நான்தான் கிங்கு..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, கெலுத்தீ- ஷான் ரோல்டன்- லலிதா சுதா -ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசை பாணியில் அமைந்திருக்கும் இந்தப் பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருப்பதுடன் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையும் படைத்து வருகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM