மலையாள திரையுலகில் இருந்து பான் இந்திய நட்சத்திர நடிகராக முன்னேறி இருக்கும் துல்கர் சல்மான் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டைலிஷ்ஷான தோற்றத்தில் நடித்திருக்கும் 'ஐ அம் கேம்' எனும் திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஐ அம் கேம்' திரைப்படத்தில் துல்கர் சல்மான் இதுவரை இல்லாத அளவிற்கு திரையில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தோற்றத்தில் தோன்றுகிறார்.
இவருடன் அண்டனி வர்கீஸ், இயக்குநரும், நடிகருமான மிஷ்கின்,கயாடு லோகர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேபரர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இருபதாம் திகதி முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக இந்த திரைப்படம் வெளியாகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM