இலண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் பாதை குண்டு வெடிப்போடு தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் 21 வயதான யாஹியா ஃப்ரூக் என்பவரின் புகைப்படத்தையே அந் நாட்டு பொலிஸ் வெளியிட்டுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடைய 18 வயதுடைய மற்றுமொறு இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.