(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (11) கூடியது. புதிதாக தெரிவுசெய்யப்பட்ட தி.மு.க சட்டசபையின் குழுத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
இன்று (11) காலை தற்காலிக சபாநாயகரான கருப்பையா தலைமையில் கூடியது. அதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
அவரைத் தொடர்ந்து, புதிதாக தெரிவுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதன் பின்னர், தி,மு.க சட்டமன்றக் குழுத் தலைவரான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
நேற்று (10) தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் தெரிவுசெய்யப்பட்டார்.
அப்போது தொடங்கி, தமிழக ஊடகங்கள் “விஜய் எதிர் உதயநிதி” (விஜய் vs உதயநிதி) என்றும் அடுத்த தலைமுறை அரசியல் தொடங்கிவிட்டதாகவும் கூறிவருகின்றன.
“தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.விஜய் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்” என்றும் “ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக நாங்கள் இருப்போம்” என்றும் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்றைய சட்டசபை கூட்டத்திலும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிர் இருக்கையில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதும் தற்போது பேசப்பட்டு வருகிறது.
மேலும், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற தருணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்க்கு பரஸ்பர மரியாதை கூட செலுத்தாமல் பதவியேற்றதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM