வவுனியா கற்குளம் பகுதியில் வைத்து ஆசிரியையெருவரின் தங்கச் சங்கிலிலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர்கள் அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

ஆசிரியை ஒருவர் மோட்டார் சைக்கிளில் கற்குளம் பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அவரது வீட்டு நுழை வாயிலிற்கு அருகில் வைத்து கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர்கள் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளனர். 

குறித்த நபர்கள் இருவரும் வன்னிகோட்டம் சந்தியிலிருந்து குறித்த ஆசிரியை பின் தொடர்ந்து சென்று மக்கள் நடமாட்டம் இலையென்பதை அவதானித்த பின்னரே சங்கிலியை  அபகரித்துள்ளனர்.

இவ் விடயம்  குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.