முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றி முதல் நிலைக்கு முன்னேறியது நடப்பு சம்பியன் பெங்களூரு

11 May, 2026 | 10:22 AM
image

(நெவில் அன்தனி)

ராய்பூர் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐபிஎல் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை இண்டியன்ஸை 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, அணிகள் நிலையில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

இந்தத் தோல்வியுடன் முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸ் இந்த வருட ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறுகிறது.

புவ்ணேஷ்வர் குமாரின் துல்லியமான பந்துவீச்சும் க்ருணல் பாண்டியாவின் அதிரடி அரைச் சதமும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றி அடையச் செய்தன.

அப் போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் க்ருணல் பாண்டியாவை இழந்தது. அப்போது மொத்த எண்ணிக்கை 7 விக்கெட்கள் இழப்புக்கு 149 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் கடைசி 2 ஒவர்களில் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 18 ஓட்டங்களைப் பெற்று றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் திலக் வர்மா (57), நாமன் திர் (47), ரோஹித் ஷர்மா (22) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

க்ருணல் பாண்டியா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 73 ஓட்டங்களைக் குவித்தார்.

அவருக்கு அடுத்தபடியாக ஜேக்கப் பெத்தேல் 27 ஓட்டங்களுடன் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் கோபின் பொஷ் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தீப்பக் சஹார் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிஷார, ஷானக்க துடுப்பாட்டத்திலும் சமீர, ஹசரங்க...

2026-06-14 10:40:37
news-image

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே....

2026-06-14 10:20:21
news-image

கனடா - பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா...

2026-06-13 10:49:52
news-image

வியட்-ஹொஜ் குவித்த சதத்தின் உதவியுடன் மகளிர்...

2026-06-13 09:26:45
news-image

ஆசியா  றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப்...

2026-06-12 20:05:36
news-image

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-06-12 17:32:28
news-image

இறக்குவானையின் முன்னணி கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ள...

2026-06-12 16:55:45
news-image

பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக்...

2026-06-12 16:53:18
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2026-06-12 15:58:24
news-image

செக் குடியரசை அதிரவைத்து 2 -...

2026-06-12 14:03:31
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ரி20இல்...

2026-06-12 11:08:20
news-image

பீபா 2026 உலகக் கிண்ண ஆரம்பப்...

2026-06-12 09:40:54