(நெவில் அன்தனி)
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 4 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இதன் மூலம் தனது 6ஆவது வெற்றியை ஈட்டிய சென்னை சுப்பர் கிங்ஸ் 12 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.

ஜெமி ஓவர்ட்டனின் துல்லியமான பந்துவீச்சும், உர்வில் பட்டேலின் அதிரடி அரைச் சதமும் சென்னைக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.
மேலும், 8 வருடங்களுக்கு பின்னர் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை சென்னை சுப்பர் கிங்ஸ் முதல் தடவையாக கடந்து வெற்றியீட்டியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் ஜொஷ் இங்லிஸ் 33 பந்துகளில் 10 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களைக் குவித்ததுடன் ஷாபாஸ் அஹ்மத் ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஜெமி ஓவர்ட்டன் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அன்ஷுல் கம்போஜ் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அரைச் சதம் குவித்து சென்னையின் வெற்றியை ஒரளவு இலகுவாக்கினார்.
23 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களைக் குவித்தார்.
அணித் தலைவர் ருட்டுராஜ் கய்க்வோட் 42 ஓட்டங்களையும் சஞ்சு செம்சன் 28 ஓட்டங்களையும் கார்த்திக் ஷர்மா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
ப்ரஷாந்த் வீர் 17 ஓட்டங்களுடனும் ஷிவம் டுபே 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஷாபாஸ் அஹ்மத் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திக்வேஷ் ரதி 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஊர்வில் பட்டேல்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM