இலண்டனை சேர்ந்த ஒரு பெண்மணி தனது கணவரை பேஸ்புக் மூலம் விற்க முயன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெரேசா, ராப் தம்பதியினர் இலண்டனில் வசித்து வருகின்றனர்.

தெரேசாவிற்கு எவராவது சத்தமாக சூயிங்கம் மெல்வது  பிடிக்காத விடயமாம், அவ்வாறு யாரேனும் செய்தால் கோபத்தால் கொதிப்படைந்து விடுவாராம்.

தெரேசாவின் கணவர் ராப் தான் சூயிங்கத்தை சத்தமாக மெல்லும் வீடியோவை இணையத் தளத்தில் வெளியிட்டு தனது மனைவியை வெறுப்பேற்றும் முயற்சியில் இணையத் தளத்தில் வெளியிட முன்னர்  அந்த வீடியோவை தனது மனைவியிடம் அடிக்கடி போட்டு காண்பித்திருக்கிறார். 

இதைக்கண்டு எரிச்சலடைந்த தெரேசா  வீடியோவை நிறுத்துமாறும், சத்தத்தை குறைக்குமாறும் சொல்லியும் ராப் அதனை நிறுத்தாததால் பழிவாங்கும் முயற்சில் தனது கணவனை பேஸ்புக் மூலம் விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார் தெரேசா, 

பேஸ்புக்கில்,  ராப் கழிவறை வேலைகளை நன்றாக செய்வார் என்றும் அவரை நீங்கள் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என்பது போன்ற செய்திகளை பதிவேற்றியுள்ளார்.

இதைக்கண்டு மக்கள் சிரிப்பார்கள் என்று எதிர்பார்த்த அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, 33 வயதான தனது கணவனை இலவசமாக திருடி செல்ல தெரேசா பதிவேற்றிய போஸ்ட்க்கு கமெண்ட்கள் வந்து குவிந்துள்ளது. 

இதை கண்டு அதிர்ந்த தெரேசா அந்த பதிவை உடனே நீக்கியுள்ளார்.

இந்த பதிவை கண்டு ராப் எந்த கோபமும் அடையவில்லையாம் என்பது தான் தெரேசாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது என தெரேசா தெரிவித்துள்ளார்.