ஒழுக்கமான வாகன சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம்

By Sindu

18 Sep, 2017 | 04:46 PM
image

வீதிச் சட்டத்தை பின்பற்றுகின்ற ஒழுக்கமான வாகன சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டமொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

வீதிச் சட்ட விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளே பொலிஸாரால் இனங்காணப்பட்டு  சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம் ஆயினும் கொழும்பின் பல பிரதேசங்களில் இடம்பெறும் இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் ஒழுக்கமான சாரதிகளுக்கு பரிசில்கள் மற்றும் அவர்களை அடையாளப்படுத்தும் ஸ்டிக்கரும் வழங்கப்படவுள்ளது.

இத் திட்டம் கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி  வரை கண்டி நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, இதன்போது 300 சாரதிகள்  இனங்காணப்பட்டு பரிசுகள் மற்றும் பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right