ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்

10 May, 2026 | 03:14 PM
image

ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்கு அகில இலங்கை கம்பன் கழகம் ‘கம்பன் புகழ்’ விருதை வழங்கி கெள­ர­வித்­துள்­ளது. ஜனா­தி­ப­திக்கு இந்த விருது வழங்­கப்­பட்­டமை தொடர்பில் வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இன­வேற்­று­மையால் பிள­வுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்­று­ப­டுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்து, நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று சிறு­பான்மை சமூ­கங்­க­ளையும் ஆத­ரித்து நாட்டை நிர்­வ­கித்து வரும் அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை பாராட்டும் வகை­யி­லேயே இந்த விருது வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கம்பன் கழகம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

இந்த விருது விழாவில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க கலந்­து­கொண்டு பெரும் வர­வேற்­புக்கு மத்­தியில் ‘கம்பன் புகழ்’ விரு­தினை பெற்­றி­ருந்தார். இந்த விரு­தினை வழங்­கு­வ­தற்­கான காரணம் தொடர்பில் விழாவில் அறி­விக்­கப்­பட்­டது.

“தமி­ழர்­களின் மனக்­கு­றைகள் இன்னும் முழு­மை­யாக நீங்­க­வில்லை. அடக்­கு­மு­றைகள் ஆங்­காங்கு இன்னும் தொடர்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றன. ஆனாலும் சகல இனங்­களும் ஒற்­று­மை­யாக வாழும் ஓர் இலங்­கையை நீங்கள் முழு­மை­யாக ஆக்­கித்­த­ரு­வீர்கள் என்ற நம்­பிக்கை எங்­க­ளுக்கு வந்­தி­ருக்­கின்­றது. தமிழ் மக்கள் உங்­க­ளது நேர்­மை­யான புரட்­சிக்­க­ர செயற்பாடுகளை பலப்­ப­டுத்த உங்­க­ளோடு நிற்­கின்­றார்கள் என்­ப­தற்­கான ஓர் அடை­யா­ள­மா­கவே இவ்­வி­ருது அமை­கின்­றது” என்று கம்பன் கழ­கத்தின் சார்பில் அறி­விக்­கப்­பட்­டது.

சுதந்­தி­ரத்­துக்குப் பின்னால் உள்ள இந்த நாட்டில் அர­சி­யலில் தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளதை தாங்கள் அறி­வீர்கள். இலங்­கையின் பிர­ஜை­க­ளாக இம்­மண்ணின் வளர்ச்­சிக்கு இந்­நாட்டுத் தமிழ் மக்­களும் பெரும் பங்­க­ளிப்­பினை ஆற்­றி­யுள்­ளனர். ஆனால், இன­வெறி பிடித்த சிலர் தமி­ழர்­களை இந்­நாட்டின் இரண்­டாந்­தர பிர­ஜை­க­ளாக்க முயன்­றனர். அதனால் ஏற்­பட்ட முரண்­பாட்டில் தமி­ழர்­க­ளது உயிர், உடல், உடமை என அனைத்தும் அழிக்­கப்­பட்­டன என்றும் இதன்­போது சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

கம்பன் கழ­க­மா­னது இது­வரை ‘கம்பன் புகழ்’ விரு­தினை கலை, கலா­சா­ரங்­களை வளர்ப்­ப­வர்­க­ளுக்கே வழங்கி வந்­தது. இம்­மு­றையே முதல் முத­லாக ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு இந்தக் கெள­ரவம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்கு இந்த விரு­தினை வழங்­கு­வதன் மூலம் அவ­ருக்கு ஒரு செய்­தியை வழங்­கு­வ­தற்கு கம்பன் கழகம் முயன்­றுள்­ள­தா­கவே தெரி­கின்­றது. தேசிய மக்கள் சக்­தியின் தலை­வ­ரான அநு­ர­கு­மார திசா­நா­யக்க தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படை பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கும் தீர்வு காண்பேன் என்று உறு­தி­மொழி வழங்­கி­யுள்ளார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது வடக்கு, கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதி மொழி வழங்­கி­யி­ருந்­தது.

இத­னை­விட இனப்­பி­ரச்­சி­னைக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தீர்வு காணப்­படும். அது­வரை 13ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழான மாகாண சபை முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது.

நல்­லாட்சி அர­சாங்கக் காலத்தில் அர­சி­ய­ல­மைப்­புக்­காக மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­றிட்­டங்­களை தொடர்ந்தும் முன்­னெ­டுப்­பதன் மூலம், புதிய அர­சி­ய­ல­மைப்­பினை விரைந்து உரு­வாக்க முடியும் என்றும் தேசிய மக்கள் சக்தி நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்­தது.

இவ்­வாறு யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு முன்­வைக்­கப்­படும் என்று வாக்­கு­றுதி வழங்கி ஆட்­சிக்கு வந்­துள்ள ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தமது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்­டி­யது அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

ஆனால், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பிலோ அல்­லது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்­சி  குறித்தோ தற்­போ­தைய நிலையில் தேசிய மக்கள் சக்­தி­யா­னது அக்­கறை காண்­பிப்­ப­தாக இல்லை. யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு விட­யத்­திலும் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய வகையில் பொறுப்­புக்­கூ­றப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

ஆனால், அந்த பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் கூட தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் அக்­கறை காண்­பிக்­க­வில்லை. தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அர சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் வடக்கு, கிழக்கு, மலை­யகத் தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யான வாக்­கு­களை தேசிய மக்கள் சக்­திக்கு வழங்­கி­யி­ருந்­தனர்.

வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்­டங்­களில் தேசிய மக்கள் சக்தி பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்­களை பெற்­றி­ருக்­கின்­றது. இதே­போன்றே மலை­ய­கத்­திலும் தமிழ்ப் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­மாக அந்தக் கட்சி பெற்­றி­ருந்­தது.

இதி­லி­ருந்து தேசிய மக்கள் சக்தி மீது தமிழ் மக்கள் எந்­த­ளவு தூரம் நம்­பிக்கை வைத்து வாக்­க­ளித்­துள்­ளனர் என்ற விடயம் தெளி­வா­கி­யி­ருந்­தது. இவ்­வாறு தேசிய மக்கள் சக்தி மீது தமிழ் மக்கள் நம்­பிக்கை கொண்­டி­ருக்­கின்ற போதிலும் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு இன்­னமும் அர­சாங்கம் தீர்­வு­காண முய­ல­வில்லை என்ற கவலை, ஆதங்கம் அவர்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது.

தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது ஊழலை ஒழிக்கும் விட­யத்­திலும், போதை­வஸ்து பாவ­னையை இல்­லாது ஒழிக்கும் விவ­கா­ரத்­திலும் உரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது. இனங்­க­ளி­டையே முரண்­பா­டு­களை ஏற்­ப­டு­வதை தடுக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இன­வாதம், மத­வா­தத்தை இல்­லா­தொ­ழிக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அவை உண்­மையில் பாராட்­டத்­தக்க நட­வ­டிக்­கை­­யாகும்.

ஆனாலும், தமிழ் மக்கள் விட­யத்தில் வழங்­கிய வாக்­கு­று­திகள் இன்­னமும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இதனை ஜனா­தி­ப­திக்கு உணர்த்தி அதனை சுட்­டிக்­காட்டும் வகையில் கம்பன் கழ­கத்தின் விருது வழங்கும் செயற்­பாடு அமைந்­தி­ருக்­கின்­றது.

தமிழ் மக்கள் இன்­னமும் உங்கள் மீது நம்­பிக்கை கொண்­டி­ருக்­கின்­றனர். எனவே, அவர்­களின் எதிர்­பார்ப்­பு­களை பூர்த்தி செய்ய வேண்­டிய கடப்­பாடு உங்­க­ளிடம் உள்­ளது. அதனை நீங்கள் உணர்ந்­து­கொள்ள வேண்டும் என்­பதை பறை­சாற்றும் வகை­யி­லேயே இந்த விருது வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த நிகழ்வில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க, பல்­வேறு விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். இன நல்­லி­ணக்­கத்­துக்­காக முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களில் இருந்து ஒரு­போதும் பின்­வாங்கப் போவ­தில்லை என்று அவர் இதன்­போது உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

“எமது நாட்டின் பிரச்­சி­னைகள் இன்­னமும் முழு­மை­யாக தீர்க்­கப்­ப­ட­வில்லை என்­பது எனக்குத் தெரியும். இந்தப் பிரச்­சி­னை­களை நேர்­மை­யு­டனும் உறு­தி­யு­டனும் தீர்ப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை நாம் எடுப்போம். எமது நாட்டில் இனிமேல் இன­வா­தமோ மத­வா­தமோ தலை­தூக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்க மாட்டோம்"என்றும் ஜனா­தி­பதி இந்த நிகழ்வில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து பின் வாங்கப் போவ­தில்லை என்று ஜனா­தி­பதி தெரி­வித்த விடயம் வர­வேற்­கத்­தக்­கது. ஆனால், தமிழ் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு இனி­யா­வது ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

தற்­போது தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. இது­வ­ரையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பிலோ அல்லது பொறுப்புக்கூறல் விடயத்திலோ ஒரு அடி கூட அரசாங்கம் நகரவில்லை. கடந்த அரசாங்கங்கள் எவ்வாறு வாக்குறுதியை கொடுத்து விட்டு அதனை நிறைவேற்றாது காலத்தை இழுத்தடித்து வந்தனவோ அதேபோன்று தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது.

நல்லிணக்க முயற்சியினை நிறைவு செய்வதற்கு இன்னமும் கால அவகாசம் தனக்கு வேண்டும் என்றும் கம்பன் விருது விழாவில் ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது ஆட்சிபீடமேறி இரண்டு வருடங்களாகின்றன. இனியும் கால அவகாசம் கோருவதானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு எந்தவகையிலும் உதவப் போவதில்லை. உரிய காலப் பகுதியில் அரசியல் தீர்வு தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்றே பொறுப்புக்கூறல் விடயத்திலும் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக்...

2026-06-07 14:13:43
news-image

மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும்...

2026-05-31 12:51:21
news-image

ஜனாதிபதி அநுரவின் கூற்றும் நல்லிணக்கத்தின் அவசியமும்

2026-05-24 11:14:47
news-image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பொறுப்புக்கூறலின் அவசியமும்

2026-05-17 13:57:47
news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41
news-image

தற்போதைய மோசடி தொடர்பில் உடனடி விசாரணையே...

2026-04-19 12:15:35
news-image

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துங்கள்

2026-04-11 18:26:09
news-image

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது இணக்­கப்­பாடு...

2026-04-05 10:38:09
news-image

மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் நடுநிலைமை...

2026-03-29 11:34:39
news-image

எரி­சக்தி நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்கு தேசிய...

2026-03-22 15:06:40
news-image

உலகளாவிய நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டும்

2026-03-15 13:55:18