(இணையத்தள செய்திப் பிரிவு)
மாலைதீவில் நடைபெற்ற 2-வது சர்வதேச சிரேஷ்ட வீரர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று, 63 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மதியம் நாடு திரும்பியது.
இந்தபோட்டித் தொடர் கடந்த 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை மாலைத்தீவின் - மாலே நகரில் நடைபெற்றது. இதில் இலங்கை, இந்தியா, டென்மார்க், ஜப்பான், சிங்கப்பூர், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலைத்தீவு ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட தடகள வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை அணி இந்த போட்டித் தொடரில் அபாரமாக விளையாடி, 31 தங்கப் பதக்கங்கள், 26 வெள்ளிப் பதக்கங்கள், 06 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 63 பதக்கங்களை வென்றுள்ளது.
வெற்றிப் பதக்கங்களுடன் இலங்கைத் தடகள அணியினர் இன்று மதியம் 12.30 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான RL -112 என்ற விமானம் மூலம் மாலைதீவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM