ஷுப்மான் கில், சாய் சுதர்சன் துடுப்பாட்டத்திலும் ராஷித் கான், ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சிலும் அபாரம்; குஜராத்துக்கு இலகுவான வெற்றி!

Published By: Digital Desk 1

10 May, 2026 | 12:20 PM
image

(நெவில் அன்தனி) 

ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (09) இரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 77 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

அணித் தலைவர் ஷுப்மான் கில், சாய் சுதர்சன் ஆகியோர் குவித்த அபார அரைச் சதங்களும் ராஷித் கான், ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் குஜராத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.

சாய் சுதர்சன், ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 66 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால் அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்ததுடன் சிறந்த இணைப்பாட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

ஷுப்மான் கில் 44 பந்துகளில் 84 ஓட்டங்களையும் சாய் சுதர்சன் 36 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

வொஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களுடனும் ராஹுல் தெவாட்டியா 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ப்ரிஜேஷ் ஷர்மா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு மிக மோசமாக துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 16.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

வைபவ் சூரியவன்ஷி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 16 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பெற்று ஆரம்ப விக்கெட்டில் யஷஸ்வி ஜய்ஸ்வாலுடன் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஆனால், அதன் பின்னர் ரவிந்த்ர ஜடேஜா (38), த்ருவ் ஜுரெல் (24) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

ராஷித் கான் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜேசன் ஹோல்டர் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெகிசோ ரபடா 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ராஷித் கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிஷார, ஷானக்க துடுப்பாட்டத்திலும் சமீர, ஹசரங்க...

2026-06-14 10:40:37
news-image

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே....

2026-06-14 10:20:21
news-image

கனடா - பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா...

2026-06-13 10:49:52
news-image

வியட்-ஹொஜ் குவித்த சதத்தின் உதவியுடன் மகளிர்...

2026-06-13 09:26:45
news-image

ஆசியா  றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப்...

2026-06-12 20:05:36
news-image

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-06-12 17:32:28
news-image

இறக்குவானையின் முன்னணி கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ள...

2026-06-12 16:55:45
news-image

பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக்...

2026-06-12 16:53:18
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2026-06-12 15:58:24
news-image

செக் குடியரசை அதிரவைத்து 2 -...

2026-06-12 14:03:31
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ரி20இல்...

2026-06-12 11:08:20
news-image

பீபா 2026 உலகக் கிண்ண ஆரம்பப்...

2026-06-12 09:40:54