Hyperemesis Gravidarum என்ற பிரச்சினைக்குரிய சிகிச்சை

Published By: Robert

18 Sep, 2017 | 03:22 PM
image

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் தலைச்சுற்றலுக்கு ஆளாகும் பாதிப்பிற்குத்தான் Hyperemesis Gravidarum என்று மருத்துவத்துறை பெயரிட்டிருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவுற்று 6ம் மாதத்திற்கு பிறகும் பிரசவத்தின் நெருக்கத்திலும் கடுமையான வாந்தியும், மயக்கமும், தலைச்சுற்றலும் இருக்கும். இதனால் உடலில் இயல்பாக இருக்கவேண்டிய நீர்ச்சத்து இல்லாத நிலை ஏற்படும். நீரிழிப்பின் காரணமாக உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான தாது சத்துகள் மற்றும் உப்புச்சத்து அதிகளவில் வெளியேறிவிடும். இதன் காரணமாக கர்ப்பிணிப்பெண்களின் உடல் எடை தொடர்ந்து குறைந்துகொண்டேவரும். இதனால் வயிற்றில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியைக் கூட பாதிக்கும்.

இத்தகைய பாதிப்பு முன்னர் உலகளவில் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமேயிருந்ததாம். ஆனால் தற்போது இந்த சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அதனால் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும். அலட்சியப்படுத்தினால் குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம். அத்துடன் இரத்த உறைதலில் பிரச்சனை, மன நிலை மாற்றம் ஆகியவையும் ஏற்படும்.

இதற்கான நிவாரணமாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவெனில், கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு பிடித்த உணவை ஒரே சமயத்தில் அதிகளவில் சாப்பிடாமல், பிரித்து பிரித்து சாப்பிட்டால் நல்லது. இஞ்சியை எந்த வடிவிலாவது உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு இதற்கெனவேயிருக்கும் விசேட அக்குபிரசர் சிகிச்சையையும் மேற்கொள்ளலாம். உடலிலுள்ள கரையக்கூடிய விற்றமின்கள் இதன் காரணமாக அதிகளவில் வெளியேறுவதால், தயாமின் அளவு செறிவாக இருக்கும் உணவுப் பொருளை உண்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

டொக்டர் பத்மா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஃபோர்மில்க் டயரியா' எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-03-26 15:27:52
news-image

இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்க விளைவு உண்டாகுமா?

2025-03-25 15:50:06
news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15