(நெவில் அன்தனி)
மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பதிலளித்து துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களை இழந்து 413 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் இரண்டாம் நாளான சனிக்கிழமை (09) ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அஸான் அவாய்ஸ், இமாம்-உல்-ஹக் ஆகிய இருவரும் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
இமாம்-உல்-ஹக் 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அறிமுக வீரர்களான அஸான் அவாய்ஸ் 85 ஓட்டங்களுடனும் அப்துல்லா பஸால் 37 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.
முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த பங்களாதேஷ் சகல விக்கெட்களை இழந்து 413 ஓட்டங்களைப் பெற்றது.

தங்களது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்த முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் முறையே 71 ஓட்டங்களையும் 33 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தனர்.
கடை நிலை வீரர் தஸ்கின் அஹ்மத் 28 ஓட்டங்களை பெற்றார்.
பங்காளாதேஷின் மொத்த எண்ணிக்கையில் 37 உதிரிகள் அடங்கி இருந்தன.
நேற்றைய தினம் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 101 ஓட்டங்களையும் மொமினுள் ஹக் 91 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் மொஹம்மத் அபாஸ் 92 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 113 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM