தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்  

09 May, 2026 | 07:49 PM
image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். 

இன்று (9) விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான தமது ஆதரவுக் கடிதத்தை வழங்கின.

இதனையடுத்து, ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான உரிமையினை விஜய் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

 பெரும்பான்மை ஆதரவை நிரூபித்து, தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநரை சந்திக்க சென்ற விஜய், ஆளுநரை சந்திக்காமல் இடைநடுவிலேயே தனது கட்சி அலுவலகத்துக்கு திரும்பினார். 

அர்லேகர் கேரள மாநிலத்துக்கும் ஆளுநர் என்பதால், அங்கு சில பணிகளை மேற்கொள்வதற்காக இன்று மாலை கேரளாவுக்கு செல்லவிருந்தார். இதனால் விஜய் ஆளுநரை சந்திப்பதில் சில தடைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர, ஆளுநரின் கேரள பயணம் இரத்து செய்யப்பட்டதாகவும் ஆளுநரை சந்திக்க மீண்டும் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த அழைப்பின் பேரில் விஜய் மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று சந்தித்துள்ளார்.

அங்கு விஜய், 120 பெரும்பான்மை பலத்தை, ஆதரவுக் கடிதங்களை காண்பித்து நிரூபித்து, தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை:...

2026-06-14 14:29:04
news-image

சுவிட்சர்லாந்தில் இன்று விறுவிறுப்பான பொதுவாக்கெடுப்பு: சனத்தொகையை...

2026-06-14 11:58:10
news-image

அமெரிக்கா - ஈரான் இடையேயான வரலாற்றுச்...

2026-06-14 10:12:24
news-image

பங்குச்சந்தையில் புதிய வரலாறு படைத்த ஸ்பேஸ்எக்ஸ்...

2026-06-13 16:55:42
news-image

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32...

2026-06-13 13:57:18
news-image

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ‘ட்ரென் டி...

2026-06-13 10:15:07
news-image

3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த...

2026-06-12 10:41:55
news-image

ஈரானுடனான ‘அதிமுக்கிய உடன்பாடு’ எட்டப்பட்டது –...

2026-06-12 07:12:21
news-image

ஈரான் மீது இன்று இரவு கடுமையான...

2026-06-11 23:56:01
news-image

வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை: 12...

2026-06-11 16:20:43
news-image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...

2026-06-11 16:41:25
news-image

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: அவுஸ்திரேலியாவைத்...

2026-06-11 12:26:19