(வவுனியா செய்தியாளர்)
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் 3 மணியளவில் பேருந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடம் இருந்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைத்தொலைபேசியை பறித்துக்கொண்டு, பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
இதன்போது அங்கு நின்ற முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சிலர் அந்த இளம் குடும்பஸ்தரை முச்சக்கரவண்டியில் ஏறுமாறு கூறி, அவரை வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
பின்னர் வவுனியா, புதிய பேருந்து நிலையத்துக்கும், சோயா வீதிக்கும் இடையில் உள்ள வயல்வெளி பகுதிக்கு அழைத்துச் சென்று தன்னை தாக்கியதுடன், அவர்களால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் அந்நபரிடம் கையொப்பம் பெற்றதாகவும், அவரது கைப்பேசியில் இருந்த சில ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
குறித்த நபர்கள் நேற்று மாலை 6.30 மணிக்குப் பின்னரே தன்னை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM