தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருமாவளவன் தங்கியுள்ள மீனம்பாக்கம் தனியார் ஹோட்டலுக்கு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளார்.
வி.சி.க ஆதரவு கடிதத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆதவ் அர்ஜுனா சென்றிருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, த.வெ.க ஆட்சி அமைக்க வி.சி.க தலைவர் திருமாவளவன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ள சந்தர்ப்பத்தில் அடுத்த நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள் தீவிரமாகியிருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM