ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் ஒன்றாக பணியாற்றி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏனைய 10 பொலிஸ் அதிகாரிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். 

ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் உள்ள சினார்டோ நகரில் எல்லைப் புற சோதனைச் சாவடியில் ஒன்றாக பணியாற்றி வந்த 11 பொலிஸ்காரர்களில் ஒருவர், நேற்று தன்னுடன் பணியில் இருந்த சக பொலிஸ்காரர்கள் அனைவருக்கும் மயக்க மருந்து கொடுத்து அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தபோது துப்பாக்கியால் அத்தனை பேரையும் சுட்டுக் கொன்றுள்ளார். 

இதில் 10 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ்காரர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். 

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ்காரர் தலீபான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் பணியில் இணைந்து தலிபான்களுக்கு இரகசியமாக உதவி செய்து வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.